டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 மாதங்களாக குறைஞ்சிக்கிட்ட வந்ததே.. இந்தியாவில் இப்போ மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதா கொரோனா?

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கடந்த 9 வாரங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், தற்போது 11 சதவீதம் அளவுக்கு தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் மாறுபாடு அடைந்த வைரஸ் பரவியதற்கான அறிகுறிதான் இது என்பதை தற்போதே சொல்லிவிட முடியாது என்று மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

சீனாவில் கொத்து கொத்தாக பரவி வரும் கொரோனா வைரசால் அந்த நாடு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.

 கைவிட்ட சீன மருந்துகள்! அமெரிக்க வேக்சின் பக்கம் திரும்பிய சீனா.. கையை பிசையும் ஜின்பிங் அரசு கைவிட்ட சீன மருந்துகள்! அமெரிக்க வேக்சின் பக்கம் திரும்பிய சீனா.. கையை பிசையும் ஜின்பிங் அரசு

கொரோனா முதன் முதலாக பரவிய போது அதை நாங்கள் பரவ விடாமல் கட்டுப்படுத்திவிட்டோம் என்று சொல்லி வந்த சீனா, தற்போது பரவி வரும் ஒமிக்ரானின் மாறுபாடு அடைந்த பிஎப் 7 வகை கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் நிலைகுலைந்துள்ளது.

கட்டுப்படுத்த முடியதா?

கட்டுப்படுத்த முடியதா?

கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்பதை உணர்ந்து விட்ட சீனா, தற்போது கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்ற ஆயுதத்தை கையில் எடுக்கத் தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது முந்தைய அளவுக்கு கட்டுப்பாடுகள் இன்றி தடுப்பூசியை தீவிரமாக செலுத்தி அதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்தும் முடிவுக்கு சீனா வந்துவிட்டதாகவே தெரிகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

சீனாவில் அதிவேகமாக பரவும் பிஎப் 7-வகை கொரோனா அண்டை நாடுகளான ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளுக்கும் பரவி டது. இந்த பிஎப் 7 வகை கொரோனா அதிவேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும் அதனால், தீவிர பாதிப்பு ஏற்படலாம் என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. இதனால், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உயர்வு

இன்று நாடு முழுவதும் மருத்துவமனைகளில் தயார் நிலைகளை சரிபார்ப்பதற்காக ஒத்திகையும் நடைபெற்று வருகிறது. அதேபோல், சர்வதேச பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தற்போது விமான நிலையங்களில் சர்வதேச பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்தியா முழு அளவில் புதிய வகை கொரோனா வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை தயார்படுத்தி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவது மக்களுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

முன்பை விட 11 சதவிகிதம் அதிகரித்துள்ளது

முன்பை விட 11 சதவிகிதம் அதிகரித்துள்ளது

கடந்த 9 வாரங்களாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த வாரம் லேசாக உயர்ந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிந்த வாரத்தில் கொரோனா பாதிப்பு முன்பை விட 11 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு லேசாக உயர்ந்தாலும் இதனால், இந்தியாவில் பாதிப்பு உயரத் தொடங்கிவிட்டதாக தற்போதே சொல்லிவிட முடியாது என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால், கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து இருப்பதால் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கூட பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக தெரியக் கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.

ஆரம்ப கட்ட அறிகுறிகளா?

ஆரம்ப கட்ட அறிகுறிகளா?

மகாராஷ்டிரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம், டெல்லி இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் தொற்று பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது. இந்தியாவில் புதிய மாறுபாடு அடைந்த கொரோனா பரவியிருப்பதற்கான ஆரம்ப கட்ட அறிகுறிகளா? அல்லது பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக தெரிகிறதா? என்பது உறுதியாக தெரியவில்லை. இது ஒருபக்கம் இருந்தாலும் கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து குறைவாகவே உள்ளது.

English summary
While the number of corona cases in India has been declining for the past 9 weeks, now the number of cases has increased by 11 percent. Medical experts have explained that it is not immediately possible to say that this is a sign of the spread of a variant of the corona virus in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X