முப்படைகளுடம் இணைந்து தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வோம்: புதிய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே சூளுரை
டெல்லி: நாட்டின் முப்படைகளும் இணைந்து தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று புதிய ராணுவ தளபதியாக பொறுப்பேற்றுள்ள மனோஜ் பாண்டே உறுதி அளித்துள்ளார்.
Recommended Video
நாட்டின் 28-வது ராணுவ தளபதியான முகுந்த் நரவனே பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனையடுத்து புதிய ராணுவ தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பேற்றார்.
#WATCH | I've known the other two Service chiefs well. It's a good beginning of synergy, cooperation& jointmanship among the three Services. I assure you that all three of us will work together&take things forward for national security & defence: Army Chief General Manoj Pande pic.twitter.com/IZ23dBVudN
— ANI (@ANI) May 1, 2022
1965-ம் ஆண்டு பிறந்த நாக்பூரைச் சேர்ந்த மனோஜ் பாண்டே, 1982-ம் ஆண்டு முதல் ராணுவத்தின் பொறியியல் பிரிவில் பணியாற்றினார். பின்னர் லடாக் எல்லை, அந்தோமான் நிக்கோபர் பிராந்திய தளபதியாகவும் மனோஜ் பாண்டே பணிபுரிந்தவர். சில மாதங்களுக்கு ராணுவத்தின் துணை தளபதியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் ராணுவ தளபதி முகுந்த் நரவனே ஓய்வு பெற்றதால் தற்போது மனோஜ் பாண்டே புதிய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மனோஜ்பாண்டேவிடம் தனது பொறுப்புகள் அனைத்தையும் முகுந்த் நரவனே ஒப்படைத்தார். ராணுவ தளபதியாக பொறுப்பேற்ற மனோஜ் பாண்டே ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
இதனிடையே புதிய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே கூறியிருப்பதாவது: புவிசார் அரசியல் சூழ்நிலைகள் படிப்படியாக மாறி வருகின்றன. நம் முன்னர் ஏராளமான சவால்கள் உள்ளன. எந்த ஒரு சவாலான நிலைமையையும் எதிர்கொள்வது என்பது இந்திய ராணுவத்தின் கடமை. எனக்கு முன்னைய ராணுவ தளபதிகள் மேற்கொண்டிருந்த பணிகளை முன்னெடுத்து செல்வேன்.

கப்பல்படை, விமானப் படை ராணுவ தளபதிகளை நான் நன்கு அறிவேன். முப்படைகளும் ஒருங்கிணைந்து சவால்களை எதிர்கொள்வோம். நாட்டின் பாதுகாப்பை முப்படைகளும் இணைந்து உறுதி செய்வோம். நாட்டின் ராணுவ தளபதியாக பொறுப்பேற்றிருப்பதை பெருமைக்குரிய தருணமாக கருதுகிறேன். இவ்வாறு மனோஜ் பாண்டே கூறினார்.
ராணுவ தளபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற நரவனே, முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்படக் கூடும் என கூறப்படுகிறது. முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் கடந்த ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து புதிய தலைமை தளபதியாக முகுந்த் நரவானே நியமிக்கப்படலாம் என்கின்றன டெல்லி தகவல்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications