எல்.பி.ஜி கேஸ் தட்டுப்பாடு.. மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்.. சிலிண்டர் முன்பதிவு குறித்த உண்மைகள்
சென்னை: நகரங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு காலம் 35 நாட்களாக அதிகரிக்கப்பட்டதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுக்கிறது.. ஆனால் 35 நாட்களுக்கு பிறகே முன்பதிவு செய்ய முடியும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் நகரங்களில் உள்ள மக்களுக்கு சிலிண்டர் முன்பதிவு காலம் 35 நாட்கள் தான் என்று புக்கிங் செய்ய முயலும் பொதுமக்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் எம்எம்எஸ் அனுப்பி வைத்துள்ளன. மத்திய அரசு ஒரு நிலைப்பாடு எடுத்துள்ள நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் அதனை கடைபிடிக்கவில்லையா என்ற கேள்விகளை பொதுமக்கள் எழுப்புகிறார்கள்.
சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு காலத்தை 15 நாட்களில் இருந்து 25 நாட்களாக மத்திய அரசு கடந்த மார்ச் 2ம் வாரத்தில் அறிவித்தது. அதேபோல் சிலிண்டர் முன்பதிவு காலத்தை கிராமங்களுக்கு 45 நாட்கள் என்றும் மத்திய அரசு மாற்றியது. அதிகப்படியான மக்கள் சிலிண்டர் முன்பதிவு செய்வதை தடுக்க இந்த முறையை மத்திய அரசு பின்பற்றியது.

10 நாட்கள் அதிகரிப்பு
இதனிடையே நேற்று முதல் சிலிண்டர் முன்பதிவு காலம் நகரங்களில் சிலிண்டர் முன்பதிவு காலம் 25 நாட்கள் என்பதில் இருந்து 35 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. பலர் இன்று முன்பதிவு செய்த போது, உங்களின் அடுத்த புக்கிங் என்று கூடுதலாக 10 நாட்களை காட்டியது. அதாவது மார்ச் 25ம் தேதி முன்பதிவு செய்ய வேண்டியவர்களுக்கு இன்னும் 10 நாட்கள் கழித்து, அதாவது ஏப்ரல் 4ம் தேதிக்கு பிறகு தான் முன்பதிவு செய்ய முடியும் பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் எம்எம்எஸ் அனுப்பி உள்ளன. இதனால் சிலிண்ட்ர் முன்பதிவு காலம் 35 நாட்களாகிவிட்டதா என்று நகரங்களில் உள்ள மக்கள், கேஸ் ஏஜென்சிகளை முற்றுகையிடுகிறார்கள்.
மத்திய அரசு மறுப்பு
இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு காலக்கெடு குறித்த செய்திகளுக்கு மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், "சமூக வலைதளங்களிலும், சில செய்திகளிலும் "பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) இணைப்புகளுக்கு 45 நாட்கள், சாதாரண ஒற்றை சிலிண்டர் இணைப்புகளுக்கு 25 நாட்கள் மற்றும் இரட்டை சிலிண்டர் இணைப்புகளுக்கு 35 நாட்கள்" என எரிவாயு முன்பதிவு காலக்கெடு மாற்றப்பட்டுள்ளதாகத் தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இதுபோன்ற எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கனவே நடைமுறையில் உள்ள அதே காலக்கெடுவே தொடர்கிறது.
நகர்ப்புறங்களில்: 25 நாட்கள்.
கிராமப்புறங்களில்: 45 நாட்கள்.
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா?
கவலைப்பட வேண்டாம்
இந்தக் காலக்கெடு, சிலிண்டர் இணைப்பு வகையைப் பொறுத்தது அல்ல; அது இருக்கும் இடத்தைப் பொறுத்தது மட்டுமே. எனவே, இது போன்ற தவறான தகவல்களை நம்பவோ அல்லது மற்றவர்களுக்குப் பகிரவோ வேண்டாம் என்றும், தேவையற்ற அல்லது பீதியினால் மேற்கொள்ளப்படும் முன்பதிவுகளைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. நாட்டில் போதுமான அளவு சமையல் எரிவாயு கையிருப்பில் உள்ளது, எனவே மக்கள் கவலைப்படத் தேவையில்லை " இவ்வாறு மத்திய அரசு கூறியுள்ளது.
35 நாட்கள் என்பது உறுதி
ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் 35 நாட்கள் முடியாமல் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியாது என்று எஸ்எம்எஸ் மூலம் அறிவித்துள்ளன. இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் இல்லாமல் தவிக்கும் நகர்புற மக்கள் 35 நாட்கள் காத்திருந்தே முன்பதிவு செய்ய முடியும் என்கிற நிலை இருக்கிறது.இதுபற்றி எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கி நிலைமையை சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
கியாஸ் தட்டுப்பாடு.. இண்டக்ஷன் அடுப்பு பயன்படுத்துவோருக்கு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு -
பாரத் கேஸ்.. சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியவில்லையா.. மக்கள் அறிய வேண்டிய பெரிய உண்மை -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!














Click it and Unblock the Notifications