இலங்கையை விடுங்க.. சத்தமில்லாமல் ஜிபூட்டியில் சம்பவம் செய்யும் சீனா! இந்தியாவுக்கு பெரிய சிக்கல்
டெல்லி: ஒரு புறம் சீன உளவு கப்பல் இலங்கை சென்றுள்ள நிலையில், மறுபுறம் சத்தமில்லாமல் மற்றொரு பதற்றத்தை கிளப்பும் நடவடிக்கையில் சீனா இறங்கி உள்ளது.
Recommended Video
சீனாவின் நடவடிக்கை தென்கிழக்கு ஆசிய நாடுகள் இடையே தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. தைவான் பக்கம் ஒரு புறமும் இந்தியா பக்கம் மறுபுறமும் சீனா பதற்றத்தை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், இந்தியாவைக் குறி வைக்கும் வகையில் புதிய கடற்படை தளத்தில் சீனா செயல்பாடுகளைத் தொடங்கி உள்ளன. இந்தியன் பசிபிக் பகுதியில் இது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்கா
அமெரிக்காவுக்குச் சொந்த நாட்டை தாண்டியும் பல்வேறு இடங்களில் ராணுவ தளங்கள் உள்ளன. அதேபோல துருக்கி, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் சொந்த நாடுகளைக் கடந்த ராணுவ தளங்கள் உள்ளன. போர் அல்லது சண்டை ஏற்படும் போது, எதிரி நாடுகளைத் தாக்குவதில் இது முக்கிய பங்கு வகிக்கும். சீனாவும் இதேபோல வெளியே ராணுவ தளம் வேண்டும் என்று எண்ணி இதற்கான வேலைகளை 2016இல் தொடங்கியது.

ஜிபூட்டி
இதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள குட்டி நாடான ஜிபூட்டி. சுமார் 590 டாலர் மதிப்பில் கட்டப்பட்டு வந்த இந்த துறைமுகம், இப்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இது ஏடன் வளைகுடா மற்றும் செங்கடலைப் பிரிக்கும் பாப்-எல்-மண்டேப் ஜலசந்தியால் அமைந்துள்ளது. குறிப்பாகச் சர்வதேச வர்த்தகத்தின் உயிர்நாடியாக இருக்கும் சூயஸ் கால்வாய்க்கு மிக அருகில் அமைந்துள்ளது.

நவீன கட்டுமானம்
சீனாவின் இந்த ஜிபூட்டி தளம் ஒரு நவீன காலனித்துவ கோட்டையைப் போலக் கட்டப்பட்டுள்ளதாகவும் இது நேரடித் தாக்குதலைத் தாங்கும் வகையில் தெளிவாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை வல்லுநர்கள் தெரிவித்துள்ளார். இந்தத் தளத்தில் கட்டுமான பணிகள் இன்னும் கூட முழுமையாக முடியவில்லை என்றாலும் கூட தளத்தை முழு வீச்சில் சீனா பயன்படுத்தத் தொடங்கி உள்ளது. இது தொடர்பான சாட்டிலைட் படங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளது.

போர் கப்பல்கள்
சீனாவின் முக்கிய கப்பலான சாங்பாய் ஷான் அங்கு இப்போது நிறுத்தப்பட்டு உள்ளது. 25,000 டன் எடையுள்ள இந்த கப்பல் சீனாவின் முக்கிய பாதுகாப்பு கப்பலாகக் கருதப்படுகிறது. மிகப் பெரிய இந்தக் கப்பலே எளிதாக உள்ளே வந்து வெளியே செல்லும்படியாக சீனா தனது ஜிபூட்டி தளத்தைக் கட்டமைத்து உள்ளதாகவும் வல்லுநர்கள் குறிப்பிட்டார். இதன் மூலம் சீனா தனது வெளிநாட்டுத் தளங்களை எப்படி உருவாக்கி வருகிறது என்பது தெளிவாகப் புரிகிறது.

இலங்கை
சீன உளவுக் கப்பல் இலங்கைக்குச் சென்றுள்ள நிலையில், இந்தப் படங்கள் வெளியாகி உள்ளது. இப்போது இலங்கையில் இருக்கும் யுவான் வாங் 5 கப்பலால் இந்தியாவில் இருக்கும் சாட்டிலைட்கள், ஏவுகணைகள் இயக்கத்தை டிராக் செய்ய முடியும். இதனால் சீன உளவு கப்பலின் வருகையைப் பெரிய சந்தேகத்துடன் தான் இந்தியா உற்று நோக்கி வருகிறது. இந்தச் சூழலில் தான் ஜிபூட்டி தளம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெரிய திட்டம்
ஜிபூட்டியில் சீனாவின் இருப்பு என்பது இந்தியப் பெருங்கடலில் அதன் இருப்பை நிலைநிறுத்துவதற்கான விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாகும். அடுத்து பாகிஸ்தானில் உள்ள குவாதர் துறைமுகம், பிராந்தியத்திலும் சீனா தனது இருப்பை அதிகரிக்கத் திட்டமிடுகிறது. முதலில் சீனா, இப்போது ஜிபூட்டி, அடுத்து பாகிஸ்தான் என இந்தியாவைக் குறி வைக்கும் வகையிலேயே சீனா நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடனே காரணம்
ஜிபூட்டியும் சரி, இலங்கையும் சரி சீனாவிடம் அதிக கடன்களை வைத்திருந்தன. அவர்களால் சீனாவின் கடனை செலுத்த முடியாமல் போனதாலேயே சீனா இருப்பதை அதிகரித்தது. இதே முறையைப் பயன்படுத்தி இந்தியப் பெருங்கடல் பகுதியில் பல்வேறு இடங்களில் தளங்களை அமைப்பதே சீனாவின் நோக்கமாக உள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications