பஸ் கூட சரியா ஓடாதா? ஆனாலும் "ஸ்பைஸ் ஜெட்" பயணிகள் பாவம் பாஸ்.. நடந்தே போன மக்கள்.. கொடுமை
டெல்லி: கடந்த சனிக்கிழமை இரவு ஹைதராபாத்திலிருந்து டெல்லி சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் தரையிறங்கிய பின்னர் பயணிகளை அழைத்து செல்ல சுமார் 45 நிமிடங்களாக பேருந்து வராததால் பயணிகள் நடந்தே டெர்மினலுக்கு சென்றனர்.
ஏற்கெனவே ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த பிரச்னையும் மேலெழுந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (DGCA) விசாரணை மேற்கொண்டு வருகிறது.
பொதுவாக விமான நிலையங்களில் வந்திறங்கும் பயணிகளை விமானங்களிலிருந்து டெர்மினலுக்கு அழைத்து செல்ல பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. பாதுகாப்பு அபாயம் உள்ளதால் பயணிகள் நடக்க அனுமதி இல்லை. எனவே வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் கடந்த சனிக்கிழமை இரவு ஹைதராபாத்திலிருந்து டெல்லி சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் தரையிறங்கிய பின்னர் பயணிகளை அழைத்து செல்ல சுமார் 45 நிமிடங்களாக பேருந்து வராததால் பயணிகள் டெர்மினலுக்கு நடந்தே செல்ல முயன்றனர். ஆனால் பாதியில் பேருந்து வந்த நிலையில் பயணிகள் அதில் ஏறி டெர்மினலுக்கு சென்றனர்.
இது குறித்து நிறுவனம் கூறியதாவது, "எங்கள் ஊழியர்கள் சிலர் எவ்வளவோ வலியுறுத்தியும் பயணிகள் சிலர் கேட்காமலேயே நடக்கத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் அவர்களால் சில மீட்டர்களை கடந்து நடக்க முடியவில்லை. இதனையடுத்து பேருந்து வந்ததும் அதில் ஏறி அவர்கள் பயணித்தனர்" என விளக்கம் அளித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து DGCA விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பயணிகள் தரப்பில் விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.
அதாவது, "ஸ்பைஸ்ஜெட்டின் ஹைதராபாத்-டெல்லி விமானம் 186 பயணிகளுடன் சனிக்கிழமை இரவு 11.24 மணியளவில் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதனையடுத்து ஒரு பேருந்து வந்து பயணிகளின் ஒரு குழுவை மட்டும் ஏற்றிச் சென்றது. இதனையடுத்து மீதமுள்ள பயணிகளை ஏற்றிச் செல்ல அந்த பேருந்து மீண்டும் வரவில்லை. சுமார் 45 நிமிடங்கள் காத்திருந்த பயணிகள் விமானத்திலிருந்து இறங்கி 1.5 கி.மீ தொலைவில் உள்ள டெர்மினலை நோக்கி நடக்கத் தொடங்கிவிட்டனர். இவர்கள் சுமார் 11 நிமிடங்கள் நடந்திருப்பார்கள். இதன் பின்னர் மீண்டும் அந்த பேருந்து 12.20 மணியளவில் வந்து பயணிகளை ஏற்றிச் சென்றது" என்று கூறியுள்ளனர்.
ஆனால் பயணிகளை நாங்கள் நடக்க வற்புறுத்தவில்லையென ஸ்பைஸ்ஜெட் மறுப்பு தெரிவித்துள்ளது. பேருந்து வருவதற்கு சற்று தாமதமானது உண்மையென்றும், அதன் பின்னர் அனைத்து பயணிகளும் பேருந்தில்தான் அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்றும் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. ஏற்கெனவே பல்வேறு குற்றச்சாட்டுகளை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் எதிர்கொண்டுள்ளது. அடிக்கடி ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானங்களை பல்வேறு இடங்களில் தரை இறக்குவது உள்ளிட்ட காரணங்களால் வெறும் 50 சதவிகித விமான சேவையை மட்டுமே நிறுவனம் மேற்கொள்ள வேண்டும் என்று DGCA ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications