குடியரசு துணைத் தலைவர் தேர்தல்.. பாஜக வேட்பாளரானார் ஜெகதீப் தன்கர்! பாஜக மேலிடம் அறிவிப்பு
டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான பாஜக வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார்கள் என்ற பலத்த எதிர்பார்ப்பு எழுந்து நிலையில் மேற்கு மாநில ஆளுநரான ஜெகதீப் தன்கர் போட்டியிடுவார் என பாஜக ஆட்சி மன்ற குழு அறிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் நாளை மறுநாள் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்காக பாஜக கூட்டணி சார்பாக திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்
இதனைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஜூலை 19 கான கடைசி நாளாகும். வரும் ஆகஸ்ட் மாதம் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவடைய இருக்கும் நிலையில், இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக வெற்றி வாய்ப்பு?
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பி-க்கள் மற்றும் நியமன எம்.பிக்கள் வாக்களிப்பார்கள். மொத்தமுள்ள 775 எம்பி-க்களில் 388 எம்பி-க்கள் வாக்களித்தால் குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். பாஜக கூட்டணி வசம் 395 எம்.பிக்கள் இருப்பதால், பாஜக வேட்பாளரின் வெற்றி உறுதியாகி உள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பு
குடியரசு துணைத் தலைவராக இருக்கும் வெங்கையா நாயுடு ஆளும் கட்சியான பாஜக சார்பில் இந்த முறை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டார். இதனால், குடியரசு துணைத் தலைவர் பதவியை மீண்டும் வெங்கையா நாயுடுவுக்கு வழங்கலாமா அல்லது முக்தார் அப்பாஸ் நக்விக்கு வழங்கலாமா என்பது குறித்து பாஜக மேலிடம் ஆலோசித்து வந்தது.

ஜெகதீப் தன்கர் அறிவிப்பு
இந்த நிலையில் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவருக்கான பாஜக வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேற்கு மாநில ஆளுநரான ஜெகதீப்தங்கர் போட்டியிடுவார் என பாஜக ஆட்சி மன்ற குழு அறிவித்துள்ளது. ஜெகதீப்தன்கர் பாஜக வேட்பாளராக போட்டியிடுவார் என அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா தெரிவித்துள்ளார். மேற்குவங்க ஆளுநராக இருக்கும் ஜெகதீப் தன்கர் மம்தா பானர்ஜியுடன் கடும் மோதல் போக்கினை கடைப்பிடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
-
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications