டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்று தாக்கலாகிறதா பொது சிவில் சட்டம்?.. பாஜக எம்பிக்களுக்கு அவசர விப் நோட்டீஸ்.. பெரும் பரபரப்பு!

இன்று லோக்சபாவில் மத்திய பாஜக அரசு சார்பாக பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    BJP may focus on Uniform Civil Code| இன்று தாக்கலாகிறதா பொது சிவில் சட்டம்?

    டெல்லி: இன்று லோக்சபாவில் மத்திய பாஜக அரசு சார்பாக பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. இன்று மத்திய பாஜக எம்பிகளுக்கு கொறடா விப் நோட்டீஸ் அனுப்பியது இந்த சந்தேகத்தை அதிகப்படுத்தி இருக்கிறது.

    லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் இன்று மத்திய பாஜக எம்பிக்கள் எல்லோரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று பாஜக கொறடா சார்பாக விப் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.மிக முக்கியமான விவாதம் காரணமாக அவைக்கு வர வேண்டும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு முக்கியமான மசோதா எதையாவது கொண்டு வருகிறதா என்று இதனால் கேள்வி எழுந்துள்ளது .

    அரசுக்கு வேறு ஏதாவது பெரிய திட்டம் இருக்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக பெரிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் போதுதான் இதுபோல் விப் நோட்டீஸ்கள் பிறப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிவில் சட்டம்

    சிவில் சட்டம்

    மத்தியில் பாஜக ஆட்சி அமரும் போதெல்லாம் பொது சிவில் சட்டம் பற்றி பேசப்படுவது வழக்கம்தான். 1949ல் நேரு பிரதமராக பதவி ஏற்ற காலத்தில் இருந்தே பொது சிவில் சட்டம் குறித்த விவாதம் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 44வது பிரிவு பொது சிவில் சட்டத்தை பரிந்துரைக்கிறது. இந்த சட்டம் பல்வேறு சிக்கல்களை கொண்டது. மத ரீதியான நிறைய சிக்கல் இதனால் வரும்.

    ஒரே சட்டம்

    ஒரே சட்டம்

    இந்த சட்டத்தின்படி இந்திய குடிமகன்கள் எல்லோருக்கும் ஒரே விதமான சட்டம் இருக்கும். அவர்கள் பின்பற்றும் மதம் சார்ந்த சட்டங்கள் செல்லுபடியாகாது. உதாரணமாக பொது சிவில் சட்டம் வந்தால் இஸ்லாமிய மக்கள் ஷரியத் சட்டத்தை பின்பற்ற முடியாது. அதேபோல் பல மாநிலங்களில் ஒரே மாதிரியான சிவில் சட்டங்களை கொண்டு வர நாடு முழுக்க சில மாற்றங்கள் செய்ய வேண்டிய சூழல் உருவாகும்.

    இரண்டு சட்டம்

    இரண்டு சட்டம்

    இந்தியாவில் இரண்டு சட்டங்கள் இருக்கிறது. ஒன்று சிவில் சட்டம், இன்னொன்று கிரிமினல் சட்டம். இந்த கிரிமினல் சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் சிவில் சட்டம் பொதுவானது இல்லை. இந்தியாவில் இஸ்லாமில் சிவில் சட்டத்திற்கு பதிலாக ஷரியத் சட்டம் பயன்படுத்தப்படுகிறது. 1937ல் இருந்து இந்த சட்டம் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் வேறு சில சிறு சிறு மதங்களும் தங்களுக்கு ஏற்றபடி சட்டங்களை பயன்படுத்தி வருகிறது.

    புதியது

    புதியது

    இதைதான் நீக்கி மொத்தமாக சிவில் சட்டம் கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளது. கோவாவில் ஏற்கனவே ஷரியத் சட்டம் செல்லாது. அங்கு பொது சிவில் சட்டம் உள்ளது. இதை நாடு முழுக்க கொண்டு வர பாஜக முயன்று வருகிறது. இதனால் சிறுபான்மையினர் உரிமை, முக்கியமாக இஸ்லாமியர்கள் உரிமை பாதிக்கும் என்று புகார் எழுந்து வருகிறது. இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய அமைப்புகள் பொது சிவில் சட்டத்தை தீவிரமாக எதிர்த்து வருகிறது.

    என்ன வாதம்

    என்ன வாதம்

    இந்த நிலையில் இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற நோக்கத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான மசோதாவை தற்போது நடக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது என்று கூறுகிறார்கள்.இந்த பொது சிவில் சட்டம் குறித்து தற்போது மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. முத்தலாக் தடை கொண்டு வரப்பட்டது கூட பொது சிவில் சட்டத்தின் ஒரு படிநிலைதான் என்று வாதம் வைக்கப்படுகிறது.

    பெண்கள் உரிமை

    பெண்கள் உரிமை

    பொது சிவில் சட்டம் மூலம் இஸ்லாமிய பெண்களுக்கு நீதி கிடைக்கும் என்று பாஜக வாதம் வைக்கிறது. இந்த நிலையில் முத்தலாக் வெற்றி, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தில் வெற்றி தற்போது அயோத்தி வழக்கில் வெற்றி மூன்றிலும் பாஜக வென்று இருக்கிறது. இது பாஜகவை மனதளவில் தெம்பாக்கி உள்ளது. இதனால் விரைவில் பொது சிவில் சட்டத்தை பாஜக கொண்டு வரும். இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்றே அந்த மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    English summary
    BJP may focus on Uniform Civil Code: May pass bill today in LS .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X