ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு
டெல்லி: சிபிஎஸ்இ (CBSE) வாரியத்தின் டிஜிட்டல் விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் வெடித்துள்ள சர்ச்சைகளைத் தொடர்ந்து, சிபிஎஸ்இ வாரியத்தின் தலைவர் மற்றும் செயலாளரை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், OSM எனப்படும் இந்த 'ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்' சேவைக்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டதில் நடந்துள்ள குளறுபடிகள் குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு ஒன்றையும் அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தாண்டு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியானது முதலே தொடர்ந்து சர்ச்சை இருந்தது. இந்த முறை சிபிஎஸ்இ அமைப்பு விடைத்தாள்களைத் திருத்த OSM எனப்படும் இந்த 'ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்' என்ற முறையைக் கொண்டு வந்தது. இருப்பினும், இதில் பல குளறுபடிகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன.

புகார்கள்
சம்பந்தமே இல்லாமல் வேறு ஒரு மாணவரின் விடைத்தாள் இன்னொரு மாணவரின் நம்பருடன் இணைக்கப்பட்டது, ஸ்கேனிங் தெளிவாக இல்லாதது என பல்வேறு புகார்கள் எழுந்தன.. இந்தத் தொழில்நுட்பக் கோளாறுகள் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
நடவடிக்கை
இந்த சூழலில் அதிரடி நடவடிக்கையாக சிபிஎஸ்இயின் உச்சபட்சப் பொறுப்பில் இருந்த இரு முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் மீதும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சிபிஎஸ்இ வாரியத்தின் ஒட்டுமொத்தத் தேர்வுகள், கல்விப் பிரிவுகள், பள்ளி அங்கீகாரங்கள், முக்கியக் கொள்கை முடிவுகள் மற்றும் மத்திய கல்வி அமைச்சகத்துடனான ஒருங்கிணைப்பு என வாரியத்தின் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் கவனித்து வந்த இந்த அமைப்பின் தலைவர் தலைவர் ராகுல் சிங் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல வாரியத்தின் அன்றாடச் செயல்பாடுகள், நிதி நிர்வாகம் மற்றும் நாடு தழுவிய தேர்வு நெட்வொர்க்கைக் கண்காணிக்கும் முதன்மைப் பொறுப்பில் இருந்து வந்த செயலாளர் ஹிமான்சு குப்தாவும் தூக்கியடிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தை மத்திய அரசு எவ்வளவு தீவிரமாகக் கையாள்கிறது என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது.
ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்
அதிகாரிகளை மாற்றியது மட்டுமின்றி, இந்த OSM எனப்படும் இந்த 'ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்' சேவைக்கான டெண்டர் எப்படி, எந்த விதிகளின் அடிப்படையில் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது என்பதை ஆய்வு செய்யவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக எஸ். ராதா சௌகான் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டதா, வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட்டதா என்பது குறித்து இந்த குழு தீவிர விசாரணை நடத்தி அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கவுள்ளது.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, தங்களின் விடைத்தாள்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து பார்க்க முயன்ற மாணவர்களுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.. ஏனென்றால் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்களில் பல பக்கங்கள் மங்கலாகவும், சில முக்கியப் பகுதிகள் அடியோடு காணாமல் போயும் இருந்துள்ளன.
டெண்டர்
இதனைத் தொடர்ந்து, ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் தளத்தில் இருந்த சைபர் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் இந்த டிஜிட்டல் மதிப்பீட்டு ஒப்பந்தத்தை ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்குத் தூக்கிக் கொடுத்த டெண்டர் நடைமுறைகள் குறித்து பொதுவெளியில் அடுக்கடுக்கான விவாதங்களும் ஏற்பட்டன. அதைத் தொடர்ந்தே இப்போது இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
நீட், சிபிஎஸ்இ குளறுபடிகள்! நாங்கள் நடத்துவது அமைதி போராட்டம்தான்! கரப்பான் பூச்சி கட்சி விளக்கம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
"வெறும் 2 நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல்.." CBSE போர்ட்டலை மொத்தமாக முடக்க முயற்சி! பகீர் -
சர்ச்சைக்கு நடுவே சிபிஎஸ்இ–க்கு புதிய தலைவர் – செயலாளர் நியமனம் – மத்திய அரசு உத்தரவு -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications