டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காலனியாதிக்க மனோபாவம்.. பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம்.. கடுமையாக சாடிய மத்திய அரசு

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்திற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒரு தலைபட்சமான இந்த ஆவணப்படம் காலனியாதிக்க மனோபாவம் இன்னமும் நீடிப்பதை காட்டுகிறது. இது கண்ணியாமனது இல்லை என்று மத்திய அரசு கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெடித்த கலவரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குஜராத்தில் அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடி கலவரத்தைத் தடுக்க முறையான பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

பிரதமர் மோடி ஜன.27-ல் பரீக்ஷா பே சர்ச்சா - தேர்வும் தெளிவும் கலந்துரையாடல்- தமிழ்நாடு பாஜக தீவிரம் பிரதமர் மோடி ஜன.27-ல் பரீக்ஷா பே சர்ச்சா - தேர்வும் தெளிவும் கலந்துரையாடல்- தமிழ்நாடு பாஜக தீவிரம்

ஆதாரம் எதுவும் இல்லை

ஆதாரம் எதுவும் இல்லை

கலவரம் நடந்த பிறகு நடத்தப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கையிலும், நரேந்திர மோடியிடம் விசாரணை நடத்துவதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த கலவரம் தொடர்பாக கடந்த ஆண்டு விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், குஜராத் கலவரத்தின்போது முதல்வராக இருந்த பிரதமர் மோடி எந்த தவறும் செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என அறிவித்து இருந்தது.

பிபிசி ஆவணப்படம்

பிபிசி ஆவணப்படம்

இந்த நிலையில், குஜராத் கலவரத்தோடு பிரதமர் மோடியை தொடர்பு படுத்தி பிபிசி ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளது. இந்தியா - மோடிக்கான கேள்விகள் என்ற தலைப்பிலான இந்த ஆவணப்படம் இரண்டு பாகங்களாக தயார் ஆகியுள்ளது. குறிப்பாக இந்திய பிரதமர் மோடிக்கும் இந்தியாவின் முஸ்லீம் சிறுபான்மையின மக்களுக்கு இடையே இருக்கும் பதற்றங்களை பார்க்க வேண்டும். ஆயிரத்திற்கு மேலானவர்கள் பலியான குஜராத் கலவரத்தில் மோடிக்கு உள்ள பங்கு குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 மத்திய அரசு எதிர்ப்பு கடும் எதிர்ப்பு

மத்திய அரசு எதிர்ப்பு கடும் எதிர்ப்பு

பிரதமர் மோடி மீது எழுந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு எதிர்ப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு கூறுகையில், ''காலனியாதிக்க மனோபாவம் இன்னமும் தொடர்வதை காட்டும் வகையில் ஆவணப்படம் இருப்பதாக சாடியுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காலனியாதிக்க மனோபாவம்

காலனியாதிக்க மனோபாவம்

இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரங்களை செய்யும் நோக்கத்தில் இந்த ஆவணப்படம் தயாராகியுள்ளது. ஆவணப்படத்தை தயாரித்த நிறுவனத்தை பிரதிபலிக்கும் வகையில் இது உள்ளது. ஒரு தலைபட்சமான இந்த ஆவணப்படம் காலனியாதிக்க மனோபாவம் இன்னமும் நீடிப்பதை காட்டுகிறது. இது கண்ணியாமனது இல்லை" என்று கடுமையாக சாடினார். இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் வம்சாவளி இம்ரான் ஹுசைன் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ரிஷி சுனக், "இந்த விவகாரத்தில் இங்கிலாந்து அரசின் நிலைப்பாடு தெளிவானது. நீண்ட காலமாக கொண்டுள்ள இந்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை" என பதில் அளித்தார்.

English summary
The central government has strongly opposed the BBC documentary on Prime Minister Modi. This groundbreaking documentary shows that colonial attitudes still persist. The central government has strongly criticized that it is not dignified.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X