கணவரின் வருமானத்தை முடக்கிவிட்டு.. ஜீவனாம்சம் கேட்ட மனைவி! நீதிபதி கொடுத்த நச் தீர்ப்பு
டெல்லி: திருமணம் என்பது இரண்டு மனங்கள் இணைவதுதான். ஆனால், வரதட்சணை என்கிற பெயரில் நடக்கும் கொடுமைகள் இந்த உறவை லாப-நஷ்ட பிசினஸாக மாற்றிவிட்டன. இப்படி இருக்கையில், திருமண முறிவு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதிலும், இந்த முறிவை காரணம் காட்டி பெண்கள் ஜீவனாம்சம் கேட்டு டார்ச்சர் செய்வதாகவும் ஆண்கள் புலம்புகின்றனர். இப்படியான வழக்கு ஒன்றில் அலகாபாத் நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பு கவனம் பெற்றிருக்கிறது.
வேத் பிரகாஷ் சிங் என்பவர் ஹோமியோபதி மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கு வினிதா என்பவருடன் திருமணம் நடந்திருந்தது. எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால், வழக்கமாக வரும் பொருளாதார பிரச்சனைகள் இவரது குடும்பத்திலும் சூறாவளியை கிளப்ப.. 2019ல் நிலைமை தலைக்கீழாய் மாறியது.

குடும்ப சண்டையில், வினிதாவின் தந்தையும், சகோதரரும் சேர்ந்து பிரகாஷை போட்டு அடி வெளுத்து இருக்கின்றனர். இந்த தாக்குதலின்போது பிரகாஷை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில்.. அவருடைய முதுகு தண்டில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவரால் சுயமாக எழுந்து நடமாட கூட முடியவில்லை. அவரது வேலையும் போய்விட்டது. இந்த சூழலிலும், மனைவி வினிதா தனக்கு ஜீவனாம்சம் வேண்டும் என்று கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், கணவர் வருமானம் ஈட்ட முடியாமல் போனதற்கு காரணம் மனவைியின் குடும்பத்தினர் நடத்திய தாக்குதல்தான். ஒருவரை செயல்படாமல் ஆக்கிவிட்டு.. அவரிடமே பணம் கேட்பது என்பது அர்த்தமற்றது. கணவரின் வருமான ஆதாரத்தையும், சொத்துக்களையும் ஏற்கெனவே குடும்பத்தினர் முடக்கி வைத்திருக்கின்றனர். மட்டுமல்லாது வினிதா நன்கு படித்தவர். சுயமாக வருமானம் ஈட்டக்கூடியவர்.
எனவே கணவரிடமிருந்து ஜீவனாசம் பெற்றுத்தவரை உத்தரவிட முடியாது. அவரை எங்களால் கட்டாயப்படுத்த முடியாது. பல வழக்குகளில். கணவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும் எப்படியாவது சம்பாதித்து மனைவிக்கு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்புகள் வந்திருக்கின்றன. ஆனால், இந்த வழக்கில்.. கணவரின் வருமானம் இழப்புக்கு காரணமே மனைவிதான். எனவே ஜீவனாம்சம் கொடுக்க கட்டாயப்படுத்த முடியாது என்று கூறியுள்ளது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications