இந்தியாவில் கொரோனா விஸ்வரூபம்.. ஒருநாள் பாதிப்பு 20ஆயிரத்தை கடந்தது -1,36,076 பேர் சிகிச்சை
இந்தியாவில் ஒரேநாளில் 20,139 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 20,139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 199.27 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
Recommended Video
கடந்த 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. பின்னர் சமூக இடைவெளி, ஊரடங்கு மூலம் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. கொரோனா தடுப்பூசி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி காரணமாக கொரோனா பரவல் வெகுவாக குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பியது.
எனினும் புதிது புதிதாக திரிபு அடைந்து கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் என்பது மெல்ல அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள முதலில் 2 தவணையாக தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் தேவைப்படுவோருக்கு பூஸ்டர் டோஸும் போடப்பட்டு வருகிறது.

20,139 பேர் பாதிப்பு
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 20,139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 16,906 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சத்து 86 ஆயிரத்து 989 ஆக பதிவாகியுள்ளது.

16,482 பேர் குணம்
இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 16,482 பேர் குணமடைந்த நிலையில் , கொரோனாவிலிருந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,30,28,356ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.49% ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.31% ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,36,076 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

5,25,557 பேர் மரணம்
அதேசமயம் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 38 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்த நிலையில், கொரோனா பலி எண்ணிக்கை 5,25,557 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் 1,99,27,27,559 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 13,44,714 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பூஸ்டர் தடுப்பூசி இலவசம்
கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்துள்ளதால் மாநில அரசுகள் தடுப்பூசி போடும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில், 18 வயது முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் 75 நாள் சிறப்பு இயக்கத்தின் கீழ் அரசு தடுப்பூசி மையங்களில் இலவசமாக கொரோனா தடுப்பு பூஸ்டர் டோஸ் போடப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜூலை 15ம் தேதி தொடங்கி 75 நாள் பொதுமக்கள் இலவசமாக கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு












Click it and Unblock the Notifications