டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதுவரை பயன்படுத்தியது 42,08,32,021 கொரோனா தடுப்பூசிகள் - கையிருப்பில் 3.29 கோடி

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 42,08,32,021 கொரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன; மேலும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனையில் 3.9 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 39,972 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,742 பேர் புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

Covid19 Vaccine: 3.29 Crore balance doses still available with States

கடந்த 24 மணி நேரத்தில் 17,18,756 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 45,62,89,567 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுவரை மொத்தம் 3,05,43,138 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.36 சதவீதமாகும். இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,08,212 ஆக உள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.30 சதவீதமாகும். வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 5 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து, 2.24 சதவீதமாக உள்ளது. தினசரி தொற்று உறுதி வீதம் தொடர்ந்து 34 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக, 2.31 சதவீதமாக பதிவாகியுள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு இதுவரை, 45.37 கோடிக்கும் அதிகமான (45,37,70,580) தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் கூடுதலாக 11,79,010 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன.

மொத்தம் 42,08,32,021 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 3.29 கோடி (3,29,38,559) தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.

English summary
Union Govt Said that More 45,37,70,580 vaccine doses have been provided to States/UTs. Of this, the total consumption including wastages is 42,08,32,021 doses. Now 3,29,38,559 balance and unutilized COVID Vaccine doses are still available with the States/UTs and private hospitals to be administered.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X