கருப்பு பணத்தை வெள்ளையாக்கவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை - புயலைக் கிளப்பும் ப.சிதம்பரம்
டெல்லி: சிலர் வைத்திருந்த கருப்பு பணத்தை சட்டப்பூர்வமாக வெள்ளையாக்கவே பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசால் அனுமதியளிக்கப்பட்டது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சிதம்பரம் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக ஆட்சியில் அதிகரித்து வரும் பணவீக்கம் வேலையின்மை குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார் ப. சிதம்பரம்.
மோடி அரசின் ஆண்டு முடிவு பரிசுகளை என்ஜாய் செய்யுங்கள் என கிண்டல் அடித்ததோடு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஐஐடி மற்றும் ஐஐஎம்களில் 10 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதைக் குறித்து மோடி அரசாங்கத்தின் மற்றொரு ஆண்டு இறுதி பரிசு என குறிப்பிட்டிருந்தார்.

புதிய புயல்
இந்த நிலையில் இந்தியர்கள் அனைவரையும் உலுக்கி எடுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவித்து கிட்டத்தட்ட 5 ஆண்டு காலம் நிறைவடைந்த நிலையில், இந்தியாவை கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு சிலருக்கு உதவுவதற்காகவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டது என ப.சிதம்பரம் புதிய புயலைக் கிளப்பி உள்ளார்..

பணமதிப்பிழப்பு நடவடிக்கை
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி இரவு பேசிய பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது எனவும், உங்களிடம் இருக்கும் நோட்டுகளை டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளுங்கள், இந்தியாவை கருப்பு பணம் இல்லாத நாடாக மாற்றுவோம் என்றார். பொதுமக்கள் அனைவரும் இதற்கு முதலில் ஆதரவு தெரிவித்த போதும் அடுத்தடுத்து ஏற்பட்ட பாதிப்பு தற்போது வரை சில இடங்களில் நீடித்து வருவதை காண முடிகிறது.

ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
இந்நிலையில் இவரது கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்காகவே பணமதிப்பிழப்பு திட்டம் பாஜக அரசில் அனுமதிக்கப்பட்டதாக ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், ரஃபேல் போர் விமான பேரத்தில் ஊழல் நடந்ததா என்பது குறித்து பிரான்சில் விசாரணை நடைபெற்று வருகிறது எனவும், கடந்த ஏழு வருடங்களில் அரசாங்கம் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகவில்லை என்று உள்துறை அமைச்சர் கூறுகிறார், ஆனால் பணமதிப்பு நீக்கம் என்பது சிலர் கருப்பு பணத்தை சட்டபூர்வமாக வெள்ளை பணமாக மாற்றும் திட்டமாகும் என கூறியுள்ளார்.

தேர்தல் பத்திரங்கள் மூலம் லஞ்சம்
தேர்தல் பத்திரங்கள் லஞ்சத்திற்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு அளித்தன எனவும், 95 சதவீத நிதியை கார்ப்பரேட் நிறுவனங்கள் பிஜேபிக்கு நன்கொடையாக அளித்த எனவும் ப.சிதம்பரம் கூறியுள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை செயல்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ள கருத்து அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications