அமெரிக்க ஒப்பந்தத்தில்.. விவசாயிகளுக்கு துரோகம்! பியூஷ் கோயல் ராஜினாமா செய்யனும் - விவசாய சங்கம்
டெல்லி: இந்தியா-அமெரிக்கா இடையே எட்டப்பட்டிருக்கும் புதிய வர்த்தக ஒப்பந்தம், விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், எனவே அமைச்சர் பியூஷ் கோயல் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வேளாண் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
இந்த ஒப்பந்தம் விவசாயிகளுக்கு இழைக்கப்படும் துரோகம் என்று விமர்சித்துள்ள சம்யுக்தா கிசான் மோர்ச்சா உள்ளிட்ட விவசாய சங்கங்கள், பியூஷ் கோயல் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

நாடு தழுவிய போராட்டம்
டெல்லி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர்கள், அமெரிக்காவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம், அமெரிக்க வேளாண் பன்னாட்டு நிறுவனங்களுக்கு முற்றிலும் அடிபணிவதையே காட்டுவதாகக் குறிப்பிட்டனர். மக்களின் நலன்களுக்கு எதிரான மோடி அரசுக்குத் தக்க பதிலடி கொடுக்கும் வகையில், பிப்ரவரி 12 அன்று நாடு தழுவிய போராட்டத்திலும், தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தத்திலும் விவசாயிகள் பங்கேற்க வேண்டும் என்று தலைவர்கள் அழைப்பு விடுத்தனர்.
தீவன சந்தை
உலர் தானியக் கழிவுகள் (DDGs), கால்நடை தீவனத்திற்கான சிவப்பு சோளம், பாதாம் வால்நட்ஸ் போன்ற உலர் பருப்புகள், புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்கள், சோயாபீன் எண்ணெய், ஒயின் போன்ற கூடுதல் பொருட்களை இந்த ஒப்பந்தத்தில் சேர்த்திருப்பது குறித்து விவசாய சங்க தலைவர்கள் கவலை தெரிவித்தனர். இது இந்தியாவின் கால்நடை தீவனச் சந்தையை அமெரிக்க நிறுவனங்கள் முழுமையாக ஏகபோகமாக்க வழிவகுக்கும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
மண்டியிட்ட ஆர்.எஸ்.எஸ்
"அமெரிக்க கால்நடை தீவனத்தில் அசைவப் பொருட்கள் இருக்கலாம் என்று நாங்கள் கேள்விப்பட்டோம். நமது மாடுகள் ஏன் அசைவ உணவைச் சாப்பிட வேண்டும் என்று அரசு விரும்புகிறது? மாமிசத் தீவனம் உண்ணும் விலங்குகளின் பாலை இறக்குமதி செய்யக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். கூறிவந்தது. இது ஒரு வரியல்லாத தடையாக இருந்தது. ஆனால், இப்போது 'மாஸ்டர்' டொனால்ட் ட்ரம்ப் தனது டிமாண்டை ஆர்.எஸ்.எஸ்.ஸை ஏற்க வைத்திருக்கிறார், அவர்கள் முற்றிலும் மண்டியிட்டுவிட்டனர்" என சம்யுக்த கிசான் மோர்ச்சா கூறியிருக்கிறது.
எத்தனால் தயாரிக்கும் போது, சோளம் அல்லது அரிசி போன்ற தானியங்களில் இருந்து ஸ்டார்ச் நீக்கப்பட்ட பிறகு மிஞ்சும் சத்து நிறைந்த துணை பொருள் தான் உலர் தானிய கழிவுகள் என்று சொல்லப்படுகிறது.
விவசாய சங்கங்கள் அதிருப்தி
அமெரிக்கா உலகின் மிகப்பெரிய சோளம் மற்றும் எத்தனால் உற்பத்தியாளர். அங்கிருந்து மலிவான விலையில் உலர் தானிய கழிவுகள் இறக்குமதி செய்யப்பட்டால்.. இந்தியாவில் சோளம் மற்றும் சோயா வளர்க்கும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இந்திய தீவன சந்தையை அமெரிக்க நிறுவனங்கள் தங்களின் மலிவான விலையாலும், அதிக அளவிலான கையிருப்பாளும் ஆக்கிரமிக்க வழி வகுக்கும் என்று விவசாய சங்கங்கள் அதிருப்தி தெரிவித்து இருக்கின்றன.
30-150% வரி
அதேபோல மத்திய அமைச்சர் பியூஸ் கோயலின் செயல் துரோகம் கொண்டது என்று விவசாய சங்கங்கள் கடுமையாக விமர்சித்து இருக்கின்றன. காரணம் கடந்த காலங்களில் இந்திய பொருட்களுக்கு வெறும் 3 சதவீதம் மட்டுமே அமெரிக்கா வரியை விதித்து இருந்தது. ஆனால், தற்போது இந்த வரி 18 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதேபோல கடந்த காலங்களில் அமெரிக்க பொருட்களுக்கு நாம் 30 முதல் 150 சதவீதம் வரை வரியை விதித்திருந்தோம்.
ஆனால், இந்த வரி இப்போது பூஜ்ஜியமாக்கப்பட்டு இருக்கிறது. அப்படி எனில், இந்தியாவுக்கான பொருட்கள் ஏற்றுமதி செய்வது சிக்கல் எழுந்திருக்கிறது. இது இந்திய விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகம் என்று விவசாயி சங்கங்கள் கூறுகின்றன.
-
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
அயதுல்லா அலி கமேனியின் மகனையும் முடித்த இஸ்ரேல்? உண்மையில் அதிகாரம் யாரிடம்? ஓங்கும் ஐஆர்ஜிசி கை! -
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
கண்கள் சிவந்த டிரம்ப்.. அமெரிக்க ராணுவ தளபதி அதிரடியாக நீக்கம்! ஈரான் போரில் தடுமாறுவது தான் காரணம்? -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
நிலவில் மீண்டும் கால் வைக்கும் மனிதர்கள்.. 53 ஆண்டுக்கு பிறகு மற்றொரு சரித்திரம் படைக்கும் அமெரிக்கா -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ












Click it and Unblock the Notifications