டெல்லி: அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்- விவசாயிகள் திட்டவட்டம்
டெல்லி: அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் சங்கத் தலைவர் குர்நாம் சிங் தெரிவித்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டடம், விலை உத்தரவாதம் மற்றும் பண்ணைச் சேவை சட்டம், விவசாயிகள் விளை பொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் ஆகியவை அந்த 3 வேளாண் சட்டங்கள்.
இது விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்பதால் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த சட்டங்களை திரும்ப பெறுமாறு மத்திய அரசிடம் கோரிக்கையை முன்வைத்தனர். ஆனாலும் மத்திய அரசு திரும்ப பெறவில்லை.

உத்தரப்பிரதேசம்
இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி டெல்லி எல்லையில் பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களை சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் திரண்டனர். கடும் குளிர், கடும் வெயில், கொரோனா பரவல் மத்தியில் விவசாயிகள் நியாயமான கோரிக்கைகளை முன் வைத்து அமைதியான முறையில் போராட்டத்தை நடத்தி வந்தனர்.

பல கட்ட பேச்சுவார்த்தைகள்
வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி பல கட்ட பேச்சுவார்த்தைகளை மத்திய அரசுடன் விவசாய சங்க பிரதிநிதிகள் நடத்தியிருந்தனர். எனினும் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை என்பதால் அவர்களது போராட்டம் தொடர்ந்து கொண்டே இருந்தது. விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ ,சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், அமெரிக்க பாப் பாடகி ரெஹானா உள்ளிட்டோர் கேட்டுக் கொண்டனர்.

குளிர் கால கூட்டத் தொடர்
இந்த நிலையில் கடந்த மாதம் 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக கூறினார். இந்த ஆண்டு குளிர் கால கூட்டத் தொடரில் இந்த சட்டங்கள் வாபஸ் பெறப்படும். எனவே விவசாயிகள் போராட்டத்தை கைவிடும் படி தெரிவித்துள்ளார்.

3 சட்டங்கள் வாபஸ்
அவரது உரையில் விவசாயிகளின் நலனை காக்கத்தான் 3 விவசாய சட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால் இவை ஒரு தரப்பு விவசாயிகளுக்கு புரிய வைப்பதில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை என்பதால் 3 சட்டங்களையும் வாபஸ் பெறுகிறேன் என கூறினார். இதையடுத்து விவசாயிகள் ஒருவருக்கு ஒருவர் இனிப்பு வழங்கப்பட்டது.

6 கோரிக்கைகள்
எனினும் குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்குவது, போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்குவது, விவசாயிகளின் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு விவசாயிகள் சங்கத்தினர் கடிதம் எழுதியிருந்தனர்.

ஆலோசனை
3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்ட பின்னர் உள்துறை அமைச்சகம் விரிவான அறிக்கையை இரு அவைகளிலும் தாக்கல் செய்தது. இந்த அறிக்கை சிங் எல்லையில் உள்ள விவசாயிகளிடம் சுமார் 5 மணி நேரமாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதில் விவசாயிகளுக்கு திருப்தி ஏற்பட்ட நிலையில் போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து இன்று சிங்கு எல்லையில் விவசாய சங்கங்கள் ஆலோசனை நடத்தினர்.

போராட்டம் தொடரும்
இதுகுறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் குர்நாம் சிங் சாருனி கூறுகையில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும் வரை எங்கள் போராட்டங்கள் தொடரும். போராட்டத்தின் போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை முழுவதும் வாபஸ் பெறுவதற்குள் நாங்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டால் அது சிக்கலாகிவிடும். விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடுவை அரசு அறிவிக்க வேண்டும் என்றார்
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை












Click it and Unblock the Notifications