இந்தியாவில் கிட்டத்தட்ட சரி பாதி விமானங்களில் பாதுகாப்பு குறைபாடு.. சோதனையில் ஷாக் ரிப்போர்ட்
டெல்லி: நமது நாட்டில் விமானப் பயணங்கள் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக மத்திய அரசின் சோதனை தொடர்பான ரிப்போர்ட் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதில் செக் செய்யப்பட்ட விமானங்களில் பாதி விமானங்களில் குறைபாடுகள் இருந்ததாக ஷாக் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இந்தியாவில் விமானத்தில் பயணிப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அத்தியாவசியமாகிறது. இதற்கிடையே இந்திய விமானங்களில் சோதனை நடத்தப்பட்டன. அதில் பரிசோதிக்கப்பட்ட விமானங்களில் பாதி விமானங்களில் குறைபாடுகள் இருந்துள்ளன.

சரி பாதி விமானங்கள்
கடந்த வாரம் விமானத் துறை சார்பில் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா குழுமம் மற்றும் இண்டிகோ ஆகியவையே இந்தியாவில் மிகப் பெரிய விமானங்களாக உள்ள நிலையில், இரண்டிலுமே பல விமானங்களில் குறைபாடு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் நாடு முழுக்க இருக்கும் ஆறு முக்கிய விமான நிறுவனங்களைச் சேர்ந்த 754 விமானங்களில் ஆய்வுகள் செய்யப்பட்டன. அதில் 377 விமானங்களில் தொடர்ச்சியான குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த விமானத்தில் என்ன சிக்கல்
இந்தியாவிலேயே மிகப் பெரிய விமான நிறுவனமாக இருக்கும் இண்டிகோவில் தான் அதிகளவில் ஆய்வு நடத்தப்பட்டன. அதில் தான் அதிகக் கோளாறுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. பிப்ரவரி 3ஆம் தேதி நிலவரப்படி, 405 இண்டிகோ விமானங்கள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், அதில் 148 விமானங்கள் குறைபாடுகளைக் கொண்டவை என அடையாளம் காணப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மொஹோல் தெரிவித்தார்.
ஏர் இந்தியா விமானங்களில் குறைபாடு விகிதம் அதிகமாக இருந்துள்ளது. அதாவது ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 267 விமானங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், அதில் 191 விமானங்களில் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 72 சதவீத விமானங்களில் பிரச்சனை இருந்துள்ளன. 166 ஏர் இந்தியா விமானங்களில் 137 விமானங்களிலும், 101 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் 54 விமானங்களிலும் இதுபோல குறைபாடுகள் இருந்துள்ளன.
இதர நிறுவனங்கள்
மற்ற விமான நிறுவனங்களிலும் நிலைமை மோசமாகவே இருந்துள்ளது. ஆய்வு செய்யப்பட்ட 43 ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் 16 விமானங்களில் பிரச்சினை இருந்துள்ளது. அதேபோல ஆகாசா ஏர் விமானத்திலும் 32ல் 14 விமானங்களில் சிக்கல் இருந்துள்ளன. இது தொடர்பான ரிப்போர்ட் வெளியாகி பேசுபொருள் ஆனது. மேலும், பலர் விமானங்களில் பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுப்பினர்.
ஏர் இந்தியா விளக்கம்
இதற்கிடையே ஏர் இந்தியா நிறுவனம் இது தொடர்பாகப் பதிலளித்துள்ளது. மிகத் தீவிரமாக இந்தச் சோதனையைச் செய்ததாகவும் இதன் காரணமாகவே விகிதம் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெரும்பாலான குறைபாடுகள் பாதுகாப்பு தொடர்பானது இல்லை என்றும் வேறு கருவிகளிலேயே சிக்கல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது பொதுவாக விமானங்களில் சிக்கல் ஏற்படும்போது அதை A முதல் D வரை வகைப்படுத்துவார்கள். அதில் ஏ என்றால் உச்சபட்ச முக்கியம்.. டி என்றால் பெரிதாக முக்கியமில்லை என அர்த்தம். ஏர் இந்தியா விமானத்தில் பெரும்பாலான சிக்கல்கள் D வகையின் கீழ் தான் வருகின்றன. ஏர் இந்தியா நிர்வாகி ஒருவர் இது குறித்துக் கூறுகையில், "ஏர் இந்தியாவைப் பொறுத்தவரை, பெரும்பாலான சிக்கல்கள் இருக்கைகள், மேசைகள், பயணிகள் படம் பார்க்க இருக்கும் ஸ்கிரீன்கள் போன்ற D வகையைச் சேர்ந்தவை தான். இதற்கும் விமானத்தின் பாதுகாப்பிற்கும் தொடர்பு இல்லை" என்றார்.
இந்தியாவில் விமானப் பாதுகாப்பை உறுதி செய்ய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையரகம் கடந்த ஆண்டு முதல் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரித்தது. திட்டமிடப்பட்ட ஆய்வுகளை தாம்டி 874 ஸ்பாட் சோதனைகள் மற்றும் 550 இரவு ஆய்வுகளையும் நடத்தப்பட்டுள்ளது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications