டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரஃபேல் போர் விமானங்கள் முறைப்படி நாளை விமானப் படையில் இணைப்பு- பிரான்ஸ் அமைச்சர் பங்கேற்கிறார்

Google Oneindia Tamil News

டெல்லி: ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் நாளை முறைப்படி இணைக்கப்படுகிறது. ஹரியானாவின் அம்பாலா விமானப் படை தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரான்ஸ் அமைச்சர் ப்ளோரன்ஸ் பார்லி Florence Parly பங்கேற்கிறார்.

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ59,000 கோடிக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் 5 ரஃபேல் போர் விமானங்கள் அண்மையில் இந்தியா வந்தடைந்தன.

French minister Florence Parly to visit India for Rafale induction

ஹரியானாவில் அம்பாலா விமானப் படை தளத்துக்கு கடந்த ஜூலை 29-ந் தேதி இந்த போர் விமானங்கள் கொண்டுவரப்பட்டன. இவற்றை இந்திய விமானப் படையில் முறைப்படி இணைக்கும் விழா நாளை (செப்.10) நடைபெற உள்ளது.

அருணாச்சலில் எல்லை தாண்டிய எருதுகள்... உளவு கருவிகளை பொருத்தி வேவு பார்க்க அனுப்பி வைத்ததா சீனா? அருணாச்சலில் எல்லை தாண்டிய எருதுகள்... உளவு கருவிகளை பொருத்தி வேவு பார்க்க அனுப்பி வைத்ததா சீனா?

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ப்ளோரன்ஸ் பார்லி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் இந்தியா- பிரான்ஸ் இருதரப்பு உறவை மேம்படுத்துவது தொடர்பாக இருநாட்டு அமைச்சர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

English summary
French defence minister Florence Parly will visit to India on September 10 to attend the ceremony marking the induction of Rafale combat jets into Indian Air Force.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X