"ஸ்கேன் செய்தால் போதும்.." கேஸ் சிலிண்டர்களில் வரும் QR கோட்கள்.. மத்திய அரசு அதிரடி! ஏன் முக்கியம்
டெல்லி: இந்தியாவில் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களில் புதிய முறையைப் பின்பற்றுவது குறித்து அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
பல வெளிநாடுகளில் பைப் லைன் மூலம் கேஸ் சப்ளை செய்யப்பட்டாலும் கூட இந்தியாவில் இன்னுமே பெரும்பாலும் சிலிண்டர் மூலம் கேஸ் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் தனியாக மானியத்துடனும், வணிக ரீதியில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்கள் தனியாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எல்பிஜி வாரம்
இருப்பினும், சிலிண்டர் மூலம் கேஸ் சப்ளை செய்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் சிலிண்டர்கள் திருடப்படுவது, அவை வணிக ரீதியில் பயன்படுத்தப்படுவது எனப் பல பிரச்சினைகள் உள்ளன. இதற்காக நேரடியாக பைப் மூலம் கேஸ் சப்ளை செய்யும் முயற்சிகளிலும் மத்திய அரசு இறங்கி உள்ளது. இதனிடையே உத்தரப் பிரதேசத்தில் 'உலக எல்பிஜி வாரம் 2022'என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

ஹர்தீப் சிங் பூரி
இதில் பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கலந்து கொண்டார். இதில் கலந்து கொண்ட அவர், நாம் உற்பத்தி செய்யும் எனர்ஜி நீடித்து நிலைத்திருக்க வேண்டியது அவசர தேவையாக இருப்பதாகத் தெரிவித்தார். அதேநேரம் ஆற்றல் என்பது அனைவருக்கும் ஏற்ற விலையில், அனைவருக்கும் கிடைக்கும் விலையிலும் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

க்யூஆர் கோட்கள்
மேலும், இந்தக் கூட்டத்தில் மற்றொரு முக்கிய விஷயத்தையும் அறிவித்தார். அதாவது அனைத்து எல்ஜிபி சிலிண்டர்களிலும் க்யூஆர் கோட்களை ஒட்ட அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். புதிதாக உற்பத்தி செய்யப்படும் சிலிண்டர்களில் க்யூஆர் கோட்கள் பதிக்கப்படும். ஏற்கனவே இருக்கும் சிலிண்டர்களில் இதற்காகத் தனியாக ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆலோசனை
இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உலக எல்பிஜி வாரத்தில் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை செய்தார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "சூப்பர் கண்டுபிடிப்பு! இந்த QR குறியீடு ஏற்கனவே உள்ள சிலிண்டர்களில் ஒட்டப்படும் மற்றும் புதியவற்றில் வெல்டிங் செய்யப்படும்.. இது ஏற்கனவே உள்ள பல்வேறு சிக்கல்களான திருட்டு, கண்காணிப்பு மற்றும் தடமறிதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும்" என்று பதிவிட்டுள்ளார்.

முதற்கட்ட பணிகள்
இது வெறும் அறிவிப்பாக நில்லாமல், ஏற்கனவே இதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பித்துவிட்டது. ஏற்கனவே முதற்கட்டமாக 20,000 சிலிண்டர்களில் க்யூஆர் கோட் ஒட்டப்பட்டு உள்ளது. வரும் மாதங்களில் அனைத்து 14.2 கிலோ வீட்டு சிலிண்டர்களிலும் இந்த கோட் பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக இது திருட்டு பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரொம்பவே ஈஸி
மேலும், தங்கள் வீட்டில் இருக்கும் சிலிண்டர் எங்குத் தயாரிக்கப்பட்டது, எங்கு நிரப்பப்பட்டது என்பது குறித்த அனைத்து தகவல்களையும் மக்கள் க்யூஆர் கோட்களை ஸ்கேன் செய்வதன் மூலம் மிக எளிதாகத் தெரிந்து கொள்ள முடியும். இன்னும் சில மாதங்களில் நாட்டில் இருக்கும் அனைத்து சிலிண்டர்களிலும் இந்த புதிய முறை கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications