டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 பேரின் உயிரை பறித்த H3N2 வைரஸ்.. அறிகுறிகள், சிகிச்சைகள் என்ன? எதை செய்யக்கூடாது.. முழு விவரம்

இந்தியாவில் H3N2 இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பால் ஹரியானா மாநிலத்தில் ஒருவரும் கர்நாடக மாநிலத்தில் ஒருவரும் என இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் H3N2 இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பால் ஹரியானா மாநிலத்தில் ஒருவரும் கர்நாடக மாநிலத்தில் ஒருவரும் என இரண்டு பேர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் என்ன? வைரஸ் பாதித்தால் என்ன செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது? போன்ற விவரங்களை இங்கே விவரமாக பார்க்கலாம்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாகவே H3N2 இன்புளூயன்சா காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது.

தமிழ்நாட்டிலும் கூட பல பகுதிகளில் இந்த H3N2 இன்புளூயன்சா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பின் தாக்கத்தில் இருந்து மக்கள் இப்போதுதான் மீண்டும் வந்து கொண்டிருக்கும் நிலையில், இப்போது இன்புளூயன்சா காய்ச்சல் பரவுகிறது. இன்புளூயன்சா எச்3என்2 காய்ச்சல்.. கொரோனோ போல வேகமாக பரவும்..3 நாட்கள் ரெஸ்ட் கட்டாயம்

H3N2 இன்புளூயன்சா காய்ச்சல்

H3N2 இன்புளூயன்சா காய்ச்சல்

இந்த நிலையில், நாடு முழுக்க பரவி வரும் இந்த H3N2 இன்புளூயன்சா காய்ச்சலால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. H3N2 இன்புளூயன்சா காய்ச்சல் காரணமாக ஹரியானாவில் ஒருவர், கர்நாடகாவில் ஒருவர் என்று இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல நாடு முழுக்க எச்3என்2 வைரஸால் 90- பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வவ்வால்களையும் பாதிக்கூடியது

வவ்வால்களையும் பாதிக்கூடியது

எச்.3 என் 2 வைரஸ் சுவாசப்பகுதியில் தொற்றை ஏற்படுத்தும் ஒரு வைரஸ் ஆகும். இந்த வைரஸ் பறவைகள் மற்றும் வவ்வால்களையும் பாதிக்கூடியது. பறவைகள் மற்றும் பிற விலங்குகளிடம் இந்த வைரஸ் மாறுபாடு அடைந்து பல திரிபுகளாக உள்ளன. இன்புளூயன்சா ஏ வகை வைரசின் துணை மாறுபாடான எச்.3 என்.2 வைரஸ் மனிதனுக்கு ஏற்படும் காய்ச்சலை ஏற்படுத்துவதில் முக்கிய காரணமாக இருப்பதாக மத்திய நோய் தடுப்பு கட்டுப்பாடு மற்றும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

அறிகுறிகள் என்ன?

அறிகுறிகள் என்ன?

உலக சுகாதார அமைப்பு தகவலின் படி, இந்த வைரஸ் லேசான மேல் சுவாச தொற்று பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுள்ளது. அதாவது காய்ச்சல் மற்றும் இருமலுடன் இணைந்து கடுமையான நிமோனியா மற்றும் சுவாசக் கோளாறு, ஷாக் மற்றும் மரணம் கூட ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. எச்.3 என் 2 வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்படும் பொதுவான அறிகுறிகளை இங்கு காணலாம்.

*குளிர்,
*இருமல்,
*காய்ச்சல்,
*குமுட்டல்
*வாந்தி
*தொண்டை வலி மற்றும் தொண்டையில் புண்
* சிலருக்கு வயிற்றுப்போக்கு
*தும்மல் மற்றும் மூக்கில் நீர் ஒழுகுதல்

மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு பகுதியில் அசவுகரியமாக உணர்தல், தொடர் காய்ச்சல், உணவை விழுங்கும் போது தொண்டையில் வலி ஆகியவை ஏற்பட்டால் மருத்துவரை பார்ப்பது மிக அவசியம்.

இந்த வைரஸ் எப்படி பரவுகிறது?

இந்த வைரஸ் எப்படி பரவுகிறது?

H3N2 இன்புளூயன்சா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. இருமும் போதும், தும்மும் போது ஏற்படும் நீர்த்திவலைகள் மூலமாக இந்த வைரஸ் மற்றொருக்கு பரவும். வைரஸ் இருக்கும் மேற்பரப்பை தொட்டு விட்டு மூக்கு மற்றும் வாய்ப்பகுதியை தொட்டாலும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படும். கர்ப்பிணிகள், குழந்தைகள், வயதானவர்கள், வேறு நோய்கள் இருப்பவர்களுக்கு இந்த வைரஸ் பதிப்பு ஏற்படும் ரிஸ்க் அதிகம்

என்ன முன்னெச்சரிக்கை தேவை

என்ன முன்னெச்சரிக்கை தேவை

* பல்ஸ் ஆக்ஸோ மீட்டர் மூலமாக தொடர்ந்து ஆக்சிஜன் லெவலை பரிசோதிப்பது அவசியம்
* ஆக்சிஜன் அளவு 95 சதவீதத்திற்கும் கீழ் இருந்தால் உடனடியாக மருத்துவரை பார்ப்பது கட்டாயம்
* ஆக்சிஜன் அளவு 90 சதவீதத்திற்கும் கீழ் சென்றால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படும்.
* சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்ளக்கூடாது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிகிச்சை வாய்ப்புகள் என்ன?

சிகிச்சை வாய்ப்புகள் என்ன?

நன்கு ஓய்வு எடுப்பது அவசியம். திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ல வேண்டும். காய்ச்சலின் தீவிரத்தை குறைக்க அசெட்டமினோஃபென் அல்லது இப்யூபுரூஃபன் போன்ற counter painkillers மருந்துகளைப் பயன்படுத்ததலாம். நோயாளிக்கு தீவிர அறிகுறிகள் இருந்தால் மருத்துவர்கள் ஒசெல்டமிவிர் மற்றும் ஜானமிவிர் போன்ற antiviral மருந்துகளை பரிந்துரைக்கலாம்.

எதையெல்லாம் செய்ய வேண்டும்?

எதையெல்லாம் செய்ய வேண்டும்?

பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து இந்த வைரஸ் மற்றொருவருக்கு எளிதில் பரவக் கூடியது ஆகும். இதனால், கீழ் கண்ட வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டியது அவசியம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

*சோப்பு போட்டு அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.
* முகக்கவசம் அணிவதோடு கூட்டமிக்க இடங்க்ளை தவிர்க்க வேண்டும்
*மூக்கு மற்றும் வாய் பகுதியை தொடுவதை தவிர்க்க வேண்டும்.
*இரும் போது தும்மும் போது முறையாக துணிகளாம் வாயை மூடிக்கொள்ள வேண்டும்.
*காய்ச்சல் உடல் வலி இருந்தால் பேராசிட்டம்மால் மாத்திரை எடுத்துக்கொள்ளலாம்.

எதையெல்லாம் செய்யக்கூடாது?

எதையெல்லாம் செய்யக்கூடாது?

*பொது இடங்களில் துப்பக்கூடாது
*கைகளை குலுக்குதல் போன்ற உடல் ரீதியாக தொடுதல் கூடாது
*சுய மருந்துகள் குறிப்பாக ஆண்டி பயாட்டிக் எடுத்துக்கொள்ளக்கூடாது.
*நெருக்கமாக அமர்ந்து சாப்பிடக்கூடாது.

English summary
In India, two people have died due to the H3N2 influenza virus, one in Haryana and one in Karnataka. What are the symptoms of this virus? What to do if infected with a virus? What not to do? Details like can be seen here in detail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X