டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சின்னதாக நடந்த கர்நாடக ஆட்டோ விபத்து! வெளிச்சத்திற்கு வந்த பயங்கரவாத சதி! நடுவே வரும் கோவை சம்பவம்?

Google Oneindia Tamil News

டெல்லி: கர்நாடகாவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட ஆட்டோ விபத்து பெரிய பயங்கரவாத தாக்குதல் முயற்சியை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த சனிக்கிழமை ஓடும் ஆட்டோ ஒன்றில் திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் அந்த ஓட்டுநரும், பயணியும் படுகாயமடைந்தனர்

நல்வாய்ப்பாக இதில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது முதலில் விபத்தாக இருக்கும் என்றே பலரும் நினைத்த நிலையில், விசாரணையில் இந்தச் சம்பவம் குறித்து வெளியாகும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இனியா மற்றும் தாத்தா எடுத்த முடிவால் விரக்தியான ராதிகா.. கடைசியில் கோபி எடுத்த பரிதாபமான முடிவு இனியா மற்றும் தாத்தா எடுத்த முடிவால் விரக்தியான ராதிகா.. கடைசியில் கோபி எடுத்த பரிதாபமான முடிவு

கர்நாடக ஆட்டோ வெடிப்பு

கர்நாடக ஆட்டோ வெடிப்பு

ஆட்டோ வெடிப்பு சம்பவம் பயங்கரவாத செயல் என்பது உறுதியாகி உள்ள நிலையில், இந்தச் சம்பவத்தில் இருக்கும் பயங்கரவாத தொடர்புகள் குறித்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர். ஆட்டோ ஓட்டுநரிடம் போலீசார் விசாரித்த போது, ஆட்டோவில் வந்த பயணி தனது பையில் எதையோ எடுத்து வந்ததாகவும் அதில் பிடித்த தீயே வாகனத்தில் பரவியதாகவும் போலீசாரிம் தெரிவித்து உள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தும் போது பல ஷாக் தகவல்கள் தெரிய வந்தது. சந்தேகிக்கப்படும் நபர் வீட்டில் இருந்து போலீசார் வெடிகுண்டு பொருட்களையும் பல போலி அடையாள அட்டைகளைக் கண்டுபிடித்து உள்ளனர்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

கர்நாடகாவில் சிறு ஆட்டோ விபத்தாகத் தொடங்கிய சம்பவம் இப்போது பயங்கரவாத நிகழ்வாக மாறியுள்ளது. இந்தச் சம்பவம் எப்படி மெல்ல வெளிச்சத்திற்கு வந்தது என்பதைப் பார்க்கலாம். மங்களூரில் ஓடும் ஆட்டோ திடீரென தீப்பிடித்ததில், கடும் புகையும் ஏற்பட்டது. இதில் ஓட்டுநர் மற்றும் அந்த பயணி என இருவருக்கும் மோசமான காயம் ஏற்பட்டது. போலி ஐடி வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்படும் அந்த பயணி, மங்களூர் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் இருந்து நாகூரில் வந்து கொண்டிருந்த ஆட்டோவில் ஏறியுள்ளார். குண்டுவெடிப்புக்குப் பின்னர், ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்று மீட்கப்பட்டது.

பயங்கரவாத செயல்

பயங்கரவாத செயல்

இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கர்நாடக போலீசார் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர். மங்களூருவில் இந்த வெடிப்பு சம்பவம் நடந்த மறுநாள், கர்நாடக டிஜிபி பிரவீன் சூட், இந்த வெடிப்பு பயங்கரவாத செயல் என்பதை உறுதி செய்தார். மேலும், இது குறித்து தீவிரமான விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார். மத்திய விசாரணை அமைப்புகளுடன் இணைந்து கர்நாடகா போலீசாரும் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். வெடிகுண்டு செயலிழக்கும் படையும் மோப்ப நாயும் குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு விரைந்துள்ளது.. அதேபோல தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு?

தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு?

மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் ஆட்டோவில் பயணித்த நபர் முகமது ஷாரிக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அந்த நபர் மீது ஏற்கனவே உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நபர் பயங்கரவாத வழக்கில் தலைமறைவாக இருந்தார். குண்டுவெடிப்பு நடத்தத் திட்டமிட்டிருந்த இடத்திற்கு அந்த நபர் சென்று கொண்டிருந்த போது, இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தின் கோவை உட்பட பல்வேறு இடங்களுக்குச் சென்றுள்ளதாகவும் அவருக்குப் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறினார். மேலும், கோவையில் தான் அவர் போலி தகவல்களைக் கொடுத்து சிம் கார்டுகளை வாங்கியுள்ளார். இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த சிலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை

விசாரணை

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "முதற்கட்ட விசாரணையில் இது பயங்கரவாத செயல் போலவே தெரிகிறது. மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளும் மாநில போலீசாரும் இணைந்து இந்த விவகாரத்தை விசாரிக்கின்றனர். சந்தேகிக்கப்படும் நபர் மருத்துவமனையில் உள்ளார். அவருக்குச் சுயநினைவு திரும்பிய பிறகு, அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படும். பார்க்க இது பெரிய நெட்வோர்க் போலவே தெரிகிறது. அது வெற்றிகரமாக முறியடிப்போம்" என்றார். அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவும் இதே கருத்துகளைத் தெரிவித்தார். "இந்த சம்பவத்தின் பின்னணியில் சதி உள்ளதாகவும் குற்றவாளிகளுக்குப் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரிவதாகவும் அவர் தெரிவித்தார்.

வெடிகுண்டு பொருட்கள்

வெடிகுண்டு பொருட்கள்

மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தடயவியல் குழு மைசூரில் சந்தேகிக்கப்படும் நபர் வாடகைக்குத் தங்கி இருந்த வீட்டை ஆய்வு செய்தனர். அங்கு வெடிபொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பொருட்களை அவர்கள் மீட்டனர். ஜெலட்டின் பவுடர், சர்க்யூட் போர்டு, பேட்டரிகள், மொபைல், அலுமினியம் மல்டி மீட்டர், பிரஷர் குக்கர் என வெடிபொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களையும் குழுவினர் மீட்டனர். மேலும், ஒரு மொபைல் போன், இரண்டு போலி ஆதார் கார்டுகள், ஒரு போலி பான் கார்டு உள்ளிட்டவற்றையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் தனது வீட்டில் வெடிகுண்டுகளைத் தயாரித்து வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

கோவை சம்பவத்திற்கு தொடர்பு?

கோவை சம்பவத்திற்கு தொடர்பு?

இந்தச் சம்பவத்திற்கும் கோவை கார் வெடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்குமோ எனச் சிலர் கூறுகின்றனர். இருப்பினும், தற்போதுவரை இரு சம்பவங்களும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என்று ஏடிஜிபி அலோக் குமார் தெரிவித்தார். கடந்த அக். 23 அன்று, கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே மாருதி 800 காரில் எல்பிஜி சிலிண்டர் வெடித்தது. இதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், இந்த வழக்கை இப்போது என்ஐஏ விசாரித்து வருகிறது. இந்த பரபரப்பு ஓய்வதற்குள்ள மங்களூரில் மீண்டும் இதேபோல ஒரு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டு உள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.

English summary
Mangaluru blast in moving auto rickshaw results in terror attack: Karnataka Auto blast latest updates in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X