டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"இந்திய வகை கொரோனா" என அழைப்பது தவறு.. WHO அப்படி சொல்லவே இல்லை.. மத்திய சுகாதாரத்துறை விளக்கம்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் பரவி வரும் B.1.617 வகை கொரோனா வைரஸை, இந்திய வகை கொரோனா என்று அழைப்பது தவறு என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலக சுகாதார மையம் இந்த B.1.617 வகையை "இந்திய வகை கொரோனா" என்று எங்கும் குறிப்பிடவில்லை என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலகம் முழுக்க பரவி வரும் கொரோனா வைரஸ் பல நூறு முறை மியூட்டேட் ஆகியுள்ளது. அதாவது கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு செல்லும் போது அதன் எம்ஆர்என்ஏ தொடங்கி பல விஷயங்களில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்கள் மியூட்டேட் என்று அழைக்கப்படும்.

கொரோனா வைரஸ் இப்படி உருமாற்றம் அடையும் நேரங்களில் அது அதிக ஆபத்து கொண்டதாக மாற வாய்ப்புள்ளது. பிரிட்டனில் பரவி வந்த கொரோனா வகை மிக மோசமாக இருந்தது.

அடையாளம்

அடையாளம்

இப்படி உருவாகும் கொரோனா வேரியென்ட்களை பலர் அந்த வகை உருவான நாட்டை வைத்து அடையாள படுத்துவது வழக்கமாகி உள்ளது. உதாரணமாக பிரிட்டனில் பரவியது பிரிட்டன் வகை, பிரான்சில் பரவியதை பிரான்ஸ் வகை என்று அழைப்பது வழக்கமாகி உள்ளது. இதை அந்தந்த நாடுகள் கடுமையாக எதிர்த்தும் வருகின்றன.

இந்திய வகை

இந்திய வகை

இந்த நிலையில் இந்தியாவில் மியூட்டேட் ஆனதாக கருதப்படும், இந்தியாவில் அதிகம் பரவி வரும் B.1.617 வகை கொரோனா வைரஸ்களை பலர் இந்திய வகை கொரோனா என்று அழைத்து வருகிறார்கள். இணையங்களிலும், செய்திகளிலும் இந்திய வகை என்று அழைத்து வருகிறார்கள். இந்த B.1.617 மிகவும் கொடியது என்று உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கவலை

கவலை

மிகவும் கவலையை அளிக்க கூடியது B.1.617 வகை கொரோனா வைரஸ் என்று உலக சுகாதார மையம் கூறியுள்ளது. உலக அளவில் இந்த வகை கொரோனா கவலையை அளிப்பதாக உலக சுகாதார மையம் கூறியுள்ளது. ஆனால் உலக சுகாதார மையம் குறித்த இந்த செய்தியை பல ஊடகங்கள் "இந்திய வகை கொரோனா வைரஸ் கவலை அளிப்பதாக" கூறி செய்தி வெளியிட்டன.

செய்தி

செய்தி

B.1.617 வகையை இந்திய வகை கொரோனா என்று உலக சுகாதார மையம் கூறாத நிலையில், பல ஊடகங்கள் உலக சுகாதார மையம் இந்தியா என்று கூறியதாக செய்தி வெளியிட்டது. இதற்கு மத்திய சுகாதாரத்துறை தற்போது பதிலடி கொடுத்துள்ளது. அதில், உலக சுகாதார மையம் B.1.617 வகை கொரோனா குறித்த அறிக்கையில் இந்தியா என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை.

பயன்படுத்தவில்லை

பயன்படுத்தவில்லை

இந்தியா என்ற வார்த்தையை எங்குமே உலக சுகாதார மையம் பயன்படுத்தவில்லை. எந்த விதமான அடிப்படை ஆதாரமும் இல்லாமல், இதை பலர் இந்திய வகை கொரோனா என்று குறிப்பிட்டது தவறு. உலக சுகாதார மையம் வெளியிட்ட 32 பக்க அறிக்கை எதிலும் இந்தியா என்ற வார்த்தையே இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை துறை வெளியிட்டுள்ளது.

English summary
Indian Variant Covid term has no basis, WHO did not says anything like that in their report says Central Health Ministry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X