என்னென்ன பண்ணுது பாருங்க.. நெட்டிசன்களை வியக்க வைத்த 'புத்திசாலி பூனை'.. தீயாய் பரவும் வீடியோ!
டெல்லி: பூனை ஒன்று வாட்டர் கூலர் மெஷினில் இருந்து தண்ணீர் குடிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. பூனையின் இந்த புத்திசாலித்தனம் நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Recommended Video
இணையத்தில் சுவாரசியம் மிக்க, பிரம்மிப்பூட்டும் வீடியோ உள்ளிட்ட பதிவுகளுக்கு பஞ்சமே இல்லை.
வேலைப்பளுவுக்கு மத்தியிலும், போரிங் டைமிலும் சமூக வலைத்தள பக்கம் தங்கள் பார்வையை திருப்பும் நெட்டிசன்களுக்கு இத்தகைய வீடியோக்களே ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருக்கிறது.

டிரெண்டாகும் வீடியோ
இதனால், இதுபோன்ற சுவாரசியம் மிக்க வீடியோக்களுக்கு நெட்டிசன்கள் மத்தியில் தனி வரவேற்பு இருக்கிறது. அதிலும் செல்லப்பிராணிகளின் குட்டிச்சேட்டைகள், சாதுர்யமான செயல்கள், புத்திசாலித்தனமான செயல்கள், குறும்புகள், சேட்டைகள் போன்ற வீடியோக்கள் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி டிரெண்ட் ஹிட் அடித்து விடும். அந்த வகையில், வீட்டில் வளர்க்கப்படும் பூனை ஒன்று தண்ணீரை வாட்டர் கூலரில் இருந்து பிடித்து குடிக்கும் ஒரு வீடியோதான் இன்று இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

தண்ணீர் குடிக்கும் பூனை
செல்லப்பிராணிகளில் பூனைகளுக்கு தனி இடம் எப்போதும் உண்டு. மியாவ்.. மியாவ்.. என்று நம் காலை சுற்றி சுற்றி வரும் பூனைகள் மிகவும் புத்திசாலிகள் என்பதற்கு எடுத்துக்காட்டு என்பது போல இணையத்தில் பரவும் இந்த வீடியோ உள்ளது. மிகவும் தாகத்துடன் தவிக்கும் பூனை ஒன்று, வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் வாட்டர் கூலர் மெஷினில் இருந்து தண்ணீரை குடிக்கிறது. அதில், சுவாரசியம் என்னவென்றால், தண்ணீர் வரும் குழாய் மேல் இருக்கும் டேப்பை தனது ஒருகாலால் அழுத்தும் பூனை, குழாய் வழியாக விழும் தண்ணீரை குடிக்க ஆரம்பிக்கிறது.

லட்சக்கணக்கான லைக்
தண்ணீரை குடித்து தனது தாகம் அடங்கியவுடன் டேப்பை அழுத்துவதை விட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டு செல்கிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் 'புத்திசாலி பூனையை பார்த்து வியந்து வருகின்றனர். மேலும் பலர் பூனையில் செயலுக்கு வாவ் போட்டு வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் வெளியான சிலமணி நேரங்களிலேயே இந்த வீடியோ 79 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து சென்று ஹிட் அடித்து வருகிறது. லட்சக்கணக்கான லைக்குகளையும் வாரி குவித்து வருகிறது.

சுட்டிக்குழந்தைகள் போல
மேலும் இந்த வீடியோவுக்கு கருத்து பதிவிட்டுள்ள நெட்டிசன்கள், ''பாலைத்தான் யாருக்கும் தெரியாமல் திருடிக்குடிக்கும் பூனை தற்போது தண்ணீரையும் நைசாக குடிப்பது பார்ப்பவர்களை ரசிக்கும் வகையில் உள்ளது" என்று பதிவிட்டுள்ளார். மேலும் சிலர் சுட்டிக்குழந்தைகள் செய்யும் புத்திசாலித்தனமான சேட்டைகளை போல் இந்த பூனையில் செயல் பிரம்மிக்க வைக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இவ்வாறாக பலரும் இந்த வீடியோவுக்கு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications