“சூதாட்டமா?”.. இந்தியா படுதோல்வி ஏன்? அமித்ஷா மகன் ஜெய்ஷாவை கோர்த்துவிடுகிறாரா மீது சுப்ரமணியன் சாமி
டெல்லி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஏற்பாட்டாளர்கள் யார் என்றும், அதில் நாம் ஏன் மோசமாக வீழ்த்தப்பட்டோம், கிரிக்கெட் சூதாட்டம் நடைபெற்றதா எனவும் பாஜக முன்னாள் எம்.பி. சுப்பிரமணியன் சாமி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நம்பிக்கை கொடுத்தது இந்தியா.
2 வது லீக் போட்டியில் குட்டி அணியான ஹாங்காங்கிற்கு எதிராக தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இந்திய அணி வெற்றியை பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.

சூப்பர் 4 சுற்று
சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் முன்னேறின. கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்தியா. செவ்வாய்கிழமை இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணி அதிர்ச்சித் தோல்வியை தழுவியது.

பாகிஸ்தான் வெற்றி
இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெறுவதற்கு பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான போட்டியில் ஆப்கானிஸ்தான் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் அந்த போட்டியில் ஆப்கானிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.

இந்தியா ஏமாற்றம்
இதனால் இந்திய அணி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறியது. கடைசியாக நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. குறிப்பாக விராட் கோலியின் சதம் ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் கொடுத்தது. இன்று நடைபெறும் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் பலப்பரிட்சை செய்கின்றன.

சுப்ரமணியன் சாமி
இந்திய ஆணி ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறதற்கு பலர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜக முன்னாள் எம்.பி. சுப்ரமணியன் சாமி ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஏற்பாட்டாளர்கள் யார்?, அதில் நாம் ஏன் மோசமாக வீழ்த்தப்பட்டோம்? கிரிக்கெட் சூதாட்டமா? அப்பாவியாக கேட்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

ஜெய்ஷா மீது அட்டாக்
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருப்பவர் ஜெய் ஷா. பிசிசிஐ செயலாளராக இருக்கும் இவர்தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனான இவர் மீது பல்வேறு விமர்சனங்கள் உள்ள நிலையில் பெயர் குறிப்பிடாமல் இத்தகைய விமர்சனத்தை முன்வைத்து உள்ளார் சுப்பிரமணிய சாமி.
-
நிதிஷ் குமாரின் நிலை எடப்பாடிக்கும் வருமா.. ஸ்டாலின் கவலைப்பட தேவையில்லை.. நயினார் நாகேந்திரன் பதில் -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
ஆந்திர மாடல்.. விஜயை வைத்து பாஜக போட்ட பலே ப்ளான்! எண்ட் கார்டு போட்ட பனையூர்! அவ்வளவு தானா? -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
மாஸ் வைத்து ஜெயிக்க முடியாதுங்க.. அண்ணாமலையை சீண்டிய குஷ்பு.. பாஜகவில் வெடித்த மோதல் -
ஜெயலலிதா இருந்தா இப்படி நடக்குமா? மொத்தமாக கண்ட்ரோலை எடுத்த பாஜக..லிஸ்டோடு டெல்லிக்கு ஓடிய எடப்பாடி! -
அதிமுகவிடம் 57 தொகுதிகளை கேட்கும் பாஜக? 57 பொறுப்பாளர்கள் வராங்களாம்.. பிஎல் சந்தோஷ் சொன்ன தகவல்! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு -
IND Vs NZ: மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரை.. வாய் பேசிய சான்ட்னரை வாயடைக்க வைத்த இந்தியப் படை! -
எவ்வளவு அசிங்கப்பட்டாலும் திருந்தல.. இந்திய டீம் தோற்கணும்னு சொல்லி அடிவாங்கும் பாகிஸ்தான் அமீர் -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில்












Click it and Unblock the Notifications