13 ஆண்டு கோமா.. 32 வயது இளைஞரை கருணை கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி.. நாட்டிலேயே முதல் முறை
டெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 32 வயது இளைஞர் கடந்த 13 ஆண்டுகளாக 'கோமா'வில் உள்ளார். அவரை கருணை கொலை செய்ய பெற்றோர் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. நாட்டிலேயே முதல் முறையாக அந்த இளைஞருக்கு உயிர் நீக்க சிகிச்சை வழியாக கருணை கொலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் கருணை கொலைக்கு தீர்ப்பு வழங்கியது இதுதான் முதல் முறையாகும்.

உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தை சேர்ந்தவர் ஹரீஷ் ராணா. இவர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். கடந்த 2013ம் ஆண்டில் விடுதியின் 4வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
4வது மாடியில் இருந்து விழுந்ததால் அவரது மூளையில் பாதிப்பு ஏற்பட்டது. சுயநினைவை இழந்தார். அதில் இருந்து அவரை மீட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியவில்லை. இருப்பினும் டாக்டர்கள் உயிரை காப்பாற்றினர். இதனால் ஹரீஷ் ராணா படுத்த படுக்கையாக கடந்த 2013ம் ஆண்டு முதல் உள்ளார். அவரை அவரது பெற்றோர் கவனித்து வந்தனர்.
13 ஆண்டுகளாக முன்னேற்றமில்லை
மேலும் அவ்வப்போது சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தது. ஹரீஷ் ராணா எப்படியாவது இயல்பு நிலைக்கு திரும்புவார் என்று பெற்றோர்கள் நம்பினர். ஆனால் கடந்த 13 ஆண்டுகளாக அவரது உடல்நலனில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேலும் ஹரீஷ் ராணாவால் சுவாசிக்கவும், சாப்பிடவும் கூட முடியாது. சுவாசத்திற்கு 'டிராகியோஸ்டோமி' மற்றும் உணவுக்கு 'காஸ்ட்ரோஜெஜூனோஸ்டிமி' குழாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கருணை கொலை கோரி மனு
கடந்த 13 ஆண்டுகளாக ஹரீஷ் ராணாவிற்கு எந்த குறையும் இல்லாமல் வீட்டில் வைத்து அவரது பெற்றோர் கவனித்து கொண்டனர். ஆனால் தற்போது அவரது பெற்றோருக்கு வயதாகிவிட்டது. இந்நிலையில் தான் ஹரீஷ் ராணாவை கருணை கொலை செய்ய அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
உயிர் நீக்க சிகிச்சை
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜேபி பர்திவாலா, கேவி விஸ்வநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹரீஷ் ராணாவின் உயிர்காக்கும் கருவிகளை அகற்றி கருணை கொலை செய்ய அனுமதி வழங்கியது.
மேலும் வீட்டில் உள்ள ஹரீஷ் ராணாவை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு வந்து எய்ம்ஸ் டாக்டர்கள் முறையான வழிமுறைகளை பின்பற்றி அவருக்கு உயிர் நீக்க சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர். நீண்டகால சிகிச்சை அளித்தும் குணமடையாததால் உயிர் காக்கும் சிகிச்சையை கண்ணியமான முறையில் நிறுத்த வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.
பெற்றோருக்கு பாராட்டு
இந்த வேளையில் கடந்த 13 ஆண்டுகளாக ஹரீஷ் ராணாவை பாதுகாத்த அவரது பெற்றோருக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது. அதுமட்டுமின்றி கருணை கொலை தொடர்பான சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது.
அதோடு, இதுபோன்ற வழக்குகள் வரும்போது கையாள நாடு முழுவதும் விரிவான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதோடு ஒருவரின் கருணை கொலைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது நாட்டிலேயே இதுதான் முதல் முறையாகும்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications