சிறுபான்மையினர் விஷயத்தில் கவனம்.. இலங்கை-சீனாவை சுட்டிக்காட்டி இந்தியாவை எச்சரித்த ரகுராம் ராஜன்!
டெல்லி: சிறுபான்மையினர் விஷயத்தில் இந்தியா கவனமாக செயல்பட வேண்டும் என இலங்கை, சீனா உள்ளிட்ட நாடுகளை சுட்டிக்காட்டி ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வருவதாகவும், இந்தியா எதிர்காலத்தில் இலங்கை, பாகிஸ்தான் போன்று பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இதனை மத்திய அரசு மறுத்துள்ளது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். அதில் இந்தியாவின் பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்லும் என்ற பேச்சுக்கே இடமில்லை என கூறினார்.

ரகுராம் ராஜன் பேட்டி
இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு இந்தியாவின் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பேட்டியளித்தார். அப்போது அவர் இந்தியா, இலங்கை நாடுகளின் பொருளாதார விவகாரம் மற்றும் இருநாடுகளில் உள்ள சிறுபான்மையினர் பிரச்சனைகள் குறிப்பிட்டு கேட்ட சில கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

இன நல்லிணக்கம் முக்கியம்
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது தாராளமய ஜனநாயகம் குறைவாக உள்ளது. இலங்கை நாட்டின் பொருளாதார நெருக்கடி என்பது சிறுபான்மையின மக்களை அவர்கள் நடத்திய விதத்தையும் குறிக்கும். இலங்கையில் சிறுபான்மையினராக அதிகளவில் தமிழர்கள் இருந்தனர். அவர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் இருந்தது. இதில் அரசியல்வாதிகள் கவனம் செலுத்தாத நிலையில் தான் உள்நாட்டு போர் வெடித்தது. என்னை பொறுத்தவரை இலங்கையின் நிலை என்பது ஒரு பாடம் என கூறுவேன். ஏனென்றால் இன நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை என்பது ஒரு நாட்டுக்கு முக்கியமானதாகும். அதுவே நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஒருமைப்பாட்டை வலுவாக வைக்கும்.

எரிபொருள் ஊற்றினால்..
மேலும் இலங்கையில் அரங்கேறிய பிரச்சனைகளை இந்தியா சந்திக்க கூடாது. இலங்கையில் எரிந்த நெருப்பு போல் இந்தியாவில் நெருப்பு மூட்ட அரசியல்வாதிகள் எரிபொருளை ஊற்றினால் நாம் கவலைப்பட வேண்டும். வகுப்புவாத கலவரம் என்பதும் நாட்டின் பொருளாதாரம் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வகுப்புவாத கலவரம் இருந்தால் நாட்டு மக்கள் கவலைப்படுகிறார்கள். பின்விளைவுகள் குறித்து நினைக்கிறார்கள். மேலும் தவறான வழியில் செல்லும் நாடு என வணிகம் செய்யவும் அச்சம் ஏற்படும்.
Recommended Video

சரியாக செயல்பட்டால் மீட்டு விடலாம்
இதற்கு உதாரணமாக சீனாவை கூறலாம். சீனாவில் உய்குர் முஸ்லிம் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டால் அந்நாட்டில் தயாரிக்கும் பொருட்களுக்கு பல நாடுகளில் தடை நீடிக்கின்றன. மேலும், சீனாவில் வணிகம் செய்வதை தவிர்க்கும் வகையில் செயல்படும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற பிரச்சனைகளில் நாம் சரியாக செயல்பட்டால் இழந்ததை கூட மீட்டுவிடலாம். இல்லாவிட்டால் நிலைமை கடினமானதாக மாறிவிடும்.












Click it and Unblock the Notifications