டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதை பண்ணுங்க.. ஆடைகளை உலர்த்த பயன்படும் நவீன தொழில்நுட்பம்.. ஆனந்த் மகிந்திரா பகிர்ந்த "டெக்னாலஜி"!

Google Oneindia Tamil News

டெல்லி: சமீபநாட்களாக தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா சில முக்கிய தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். அவர் பகிரும் தகவல்கள் அன்றைய நாள் முழுவதும் பேசுபொருளாகி அதன் மீதான விவாதங்கள் சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்திருக்கும்.

அந்த வகையில் தற்போது டிவிட்டரில் ஒரு கேலிசித்திரத்தை பகிர்ந்து "சில நேரங்களில் நவீன தொழில்நுட்பம் நம்மை அடிப்படைக்கு அழைத்துச் செல்வதைப்பற்றி இருக்கும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பயப்படாதீங்க.. அக்னிபாத் வீரர்களை வேலைக்கு எடுக்க நான் ரெடி.. ஆனந்த் மஹிந்திரா அதிரடிபயப்படாதீங்க.. அக்னிபாத் வீரர்களை வேலைக்கு எடுக்க நான் ரெடி.. ஆனந்த் மஹிந்திரா அதிரடி

மனிதன்

மனிதன்

ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை மனிதன் உருவாக்கி வருகிறான். மனிதன் நாகரிகமடைய தொடங்கிய காலத்தில் நெருப்புதான் அவனின் முதல் தேவையாகவும் முதல் கண்டுபிடிப்பாகவும் இருந்தது. இந்நிலையில் இதைத் தொடர்ந்து சக்கரமும் கண்டுபிடிக்கப்பட்டது. இது கால ஓட்டத்தை புதிய கண்டுபிடிப்புகளுடன் மனித சமூகத்தை முன்னோக்கி நகர்த்தியது. நாளடைவில் புதிய புதிய தொழில்நுட்பங்கள் வளரத் தொடங்கின.

ஆனந்த் மகிந்திரா

ஆனந்த் மகிந்திரா

ஆரம்பத்தில் பெருநிறுவனங்கள் மற்றும் ராணுவத்திற்கு மட்டுமே பயன்பட்டு வந்த இந்த நவீன கண்டுபிடிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடத்திலும் புழக்கத்திற்கு வரத்தொடங்கின. ஆனால் இவ்வாறு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் புதிய தொழில்நுட்பங்கள் மனித சமூகத்தை எந்த விதத்திலும் உயர்த்தவில்லை என்றும் பாரம்பரிய வழிமுறைகளை இது மறக்கடிக்கச் செய்கிறது எனவும் ஒரு சாரார் கூறி வருகின்றனர்.

சூரிய சக்தி

சூரிய சக்தி

இந்த விவாதங்கள் எப்போதும் இருந்து வருகிறது. இதற்கிடையில்தான் ஆனந்த் மகிந்திரா கேலிச்சித்திரத்தை பகிர்ந்துள்ளார் அதில், "சூரிய சக்தி மற்றும் காற்று சக்தி உதவியுடன் நவீன தொழில்நுட்பத்தில் துவைக்கப்பட்ட துணி உலர்ந்துகொண்டிருக்கிறது" என ஒரு பெண் கொடியில் காய்ந்துகொண்டிருக்கும் துணியை பார்த்து மற்றொரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருக்கிறார். இதற்கு "சில நேரங்களில் நவீன தொழில்நுட்பம் நம்மை அடிப்படைக்கு அழைத்துச் செல்வதைப்பற்றி இருக்கும்" என மகிந்திரா கேப்ஷன் எழுதி ட்வீ ட் செய்துள்ளார்.

ட்விட்டர்

ட்விட்டர்

இந்த டிவிட்டர் போஸ்ட் பதிவிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே இதற்கு சுமார் 12 ஆயிரம் பேர் லைக்குகளை அள்ளித் தெளித்துள்ளனர். பலரும் ரீட்வீட் செய்துள்ளனர். சிலர் "புதிய தொழில்நுட்பங்களால் நம்முடைய பழைய பாரம்பரியத்தை மறந்துவிடுகிறோம்" என கமென்ட் செய்துள்ளனர். மற்றொருவர் அடிப்படைகளை கொண்டே புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன என கூறியுள்ளார்.

எது எப்படியோ புதிய தொழில்நுட்பங்கள் 2 லட்சம் ஆண்டுகள் பழமையான மனித நாகரிகத்தை முன்னோக்கித்தான் நகர்த்தவே பயன்படவேண்டுமேயொழிய பின்னோக்கி அல்ல.

English summary
Anand Mahendra shared a caricature on Twitter and noted that “sometimes modern technology takes us back to old practices.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X