டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மே 17-க்குப் பின் கட்டுப்பாடுகள் தளர்வுடன் லாக்டவுன் நீட்டிப்பு- பிரதமர் மோடி சூசகம்

Google Oneindia Tamil News

டெல்லி: மே 17-ந் தேதிக்குப் பின்னர் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று மாநில முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

லாக்டவுன் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். லாக்டவுன் குறித்து முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் 5-வது ஆலோசனை கூட்டம் இது.

Modi Indicates Lockdown to be Extended With relaxations

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, லாக்டவுன் மே 17-ந் தேதிக்குப் பின்னர் மேலும் நீட்டிக்கப்படும் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டினார். அதேநேரத்தில் தற்போதைய கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்ட ஒரு லாக்டவுனாக அது நீடிக்கும் என்றும் சூசகமாக குறிப்பிட்டிருக்கிறார்.

3வது கட்ட லாக்டவுன் நடவடிக்கைகள் 4வது கட்டத்தில் தேவையில்லை.. முதல்வர்களிடம் மோடி சூப்பர் தகவல் 3வது கட்ட லாக்டவுன் நடவடிக்கைகள் 4வது கட்டத்தில் தேவையில்லை.. முதல்வர்களிடம் மோடி சூப்பர் தகவல்

மேலும் ஒரு மாவட்டத்தையே முழுமையாக ரெட் ஜோன் என்று அறிவிக்காமல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் முழுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என்றும் மோடி சுட்டிக் காட்டினார். இதுபோல லாக்டவுன் தளர்வுகள், லாக்டவுனுக்கு பிந்தைய பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பாக மே 15-ந் தேதிக்குள் மாநில முதல்வர்கள் மத்திய அரசிடம் தங்களது ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

English summary
PM Modi on Monday indicated that the nationwide lockdown could be extended.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X