குரங்கு அம்மை பரவலால் அச்சம்.. ஹைஅலர்ட் மோடில் டெல்லி, கேரளா மாநிலங்கள்! தடுப்பு நடவடிக்கை தீவிரம்!
டெல்லி: இந்தியாவில் குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் டெல்லி, கேரளா மாநிலங்கள் ஹைஅலர்ட்டில் உள்ளன. டெல்லி, கேரளாவில் காய்ச்சல் உள்ளிட்ட குரங்கு அம்மை அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.
Recommended Video
இந்தியாவிலும் குரங்கு அம்மை நோய் பரவ துவங்கி உள்ளது. டெல்லியில் ஒருவர், கேரளாவில் மூவர் என மொத்தம் 4 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களை டாக்டர்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளிடம் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் தனிவார்டு
குறிப்பாக வெளிநாடுகளுக்கு செல்லாத நிலையில் 34 வயது நிரம்பிய நபருக்கு டெல்லியில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர் லோக்நாயக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் டெல்லியில் கண்காணிப்பு பணி அதிகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் குரங்கு அம்மை நோய்க்கான தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையம் வரும் பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளும்படி குரங்கு அம்மைக்கான அறிகுறி இருந்தால் அவர்கள் லோக் நாயக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

20 பேர் குழு
அதன்படி டெல்லி விமான நிலையம் வரும் பயணிகளுக்கு அதிக காய்ச்சல், முதுகு வலி மற்றும் மூட்டு வலி உள்ளிட்ட அறிகுறி இருந்தால் அவர்கள் உடனடியாக லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். மருத்துவமனை தனிமை வார்டை கண்காணிக்க 20 பேர் கொண்ட சிறப்பு மருத்துவ குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழு அவர்களின் மாதிரிகளை சோதித்து புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கும். அதேநேரத்தில் அறிகுறி உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக்கூட்டத்தில் முடிவு
முன்னதாக நேற்று டெல்லி லெப்டினன்ட் ஆளுநர் வி கே சக்சேனா தலைமையில் குரங்கு அம்மை பரவலை தடுப்பது பற்றிய ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தான் மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் குரங்கு அம்மை தொடர்பாக அரசின் வழிக்காட்டுதல்களை அதிகாரிகள் முறையாக பின்பற்ற வேண்டும் என டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளார்.

கேரளா நிலவரம் என்ன?
இதேபோல் கேரளாவில் தற்போது வரை 3 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கும் பரிசோதனை, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கேரள விமான நிலையத்தில் தெர்மல் ஸ்கேனிங்க், உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. கேரளா வரும் விமான பயணிகளுக்கு காய்ச்சல் உள்பட குரங்கு அம்மையின் அறிகுறிகள் உள்ளதா? என சோதனை செய்யப்பட்டுள்ளது. அறிகுறி இருப்பின் அவர்களும் மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர்.

அமைச்சர் கூறுவது என்ன?
இதுபற்றி சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், ‛‛எங்களிடம் 14 மாவட்டங்களிலும் தடுப்பூசி வசதிகள் உள்ளன. நாங்கள் எங்கள் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு, குறிப்பாக தோல் மருத்துவர்களுக்கு விழிப்புணர்வு அளித்துள்ளோம். கவலைப்பட வேண்டிய நிலை இல்லை. இருப்பினும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்'' என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications