"யூஸ்" பண்ணிட்டு தூக்கி வீசுவது எல்லாம் ரொம்ப தப்புங்க.. பாஜக தலைமையை மறைமுகமாக சாடிய நிதின் கட்கரி!
டெல்லி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பாஜகவின் சக்திவாய்ந்த நாடாளுமன்றக் குழுவிலிருந்து நீக்கப்பட்டு உள்ள நிலையில், பாஜக தலைமையை மறைமுகமாகச் சாடும் வகையில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி, அவ்வப்போது சொந்த கட்சியையே சாடும் வகையில் கருத்துகளைத் தெரிவித்து வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான், இப்போது அரசியல் என்பதே அதிகாரத்தைப் பிடிப்பதாக இருப்பதாகவும் இதனால் அரசியலில் இருந்து விலக நினைத்ததாகவும் குறிப்பிட்டார்.

கட்கரி
முன்னதாக கடந்த வாரம் தான், 2024 தேசியத் தேர்தல் உட்பட தேர்தலுக்கான திட்டங்களை முடிவு செய்யும் பாஜகவின் சக்திவாய்ந்த நாடாளுமன்றக் குழுவிலிருந்து கட்கரி நீக்கப்பட்டார். முன்னாள் பாஜக தலைவரும் வலுவான ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட நிதின் கட்கரி இந்த குழுவில் இருந்து நீக்கப்பட்டது ஆச்சரியமாகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால், பொதுவாக இந்த குழுவில் பாஜக முன்னாள் தலைவர்கள் எப்போதும் இருப்பார்கள்.

தோல்வி
இதனிடையே இதையும் மறைமுகமாக நிதின் கட்கரி விமர்சித்து கருத்து தெரிவித்து உள்ளார். நாக்பூரில் நடைபெற்ற தொழில்முனைவோர் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, எந்த ஒரு மனிதனும் தோற்கடிக்கப்பட்டால் அத்துடன் அவன் வாழ்வு முடிவதில்லை, ஆனால் அதை ஒப்புக்கொண்டு வெளியேறும் போது தான் அவன் வாழ்க்கை உண்மையில் தோல்வி அடைவதாகச் சாடியுள்ளார்.

தூக்கி வீச கூடாது
இது தொடர்பாக நிதின் கட்கரி கூறுகையில், "தொழில், மக்கள் நலன் சார்ந்த சமூகப் பணி, அரசியல் இருப்பவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் மனித உறவுகளே மிகப்பெரிய பலம். எந்தவொரு நபரையும் பயன்படுத்து விட்டுத் தூக்கி வீசுவது சரியான நடைமுறை இல்லை. நல்ல நாட்களாக இருந்தாலும் சரி, மோசமான நாட்களாக இருந்தாலும் சரி, உங்களுடன் இருக்கும் நபர்களை எப்போதும் கைவிடக் கூடாது" என்று மறைமுகமாகச் சாடினார்.

மறைமுக சாடல்
தொடர்ந்து தனது கல்லூரி நாட்கள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்த அவர், "சிறந்த எதிர்காலம் வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சியில் சேருமாறு காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீகாந்த் ஜிச்கர் எனக்கு அழைப்பு விடுத்தார். எனக்குக் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியில் இணைவதற்குப் பதிலாக நான் கிணற்றில் இருந்து குதித்து உயிரிழந்துவிடுவேன் என்று அவரிடமே நான் கூறினேன்" என்றார்.

கைவிட கூடாது
மேலும் அவர், "இளம் தொழில்முனைவோர் தங்கள் விருப்பங்களை ஒருபோதும் கைவிடக் கூடாது. முன்னாள் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் தனது சுயசரிதையில் பொறிக்கப்பட்ட பொன்னான வார்த்தைகளை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு மனிதன் தோற்கடிக்கப்பட்டால் அவன் வாழ்க்கை முடிவதில்லை.. ஆனால் அவன் வெளியேறும்போது அவன் முடிந்துவிடுகிறான்" என்றார்.
-
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications