ராஜபக்சக்களும் ரணிலும் ஒன்னு தான்! இலங்கை பிரச்சினை இப்போதைக்கு முடியாது போல! ப.சிதம்பரம் பளீர்!
டெல்லி : இலங்கையில் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் போராட்டங்கள் முடிவுக்கு வராது என மத்திய முன்னாள் நிதியமைச்சர் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்ததை எடுத்து அந்நாட்டின் அதிபரான கோத்தபய ராஜபக்சே கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து நாட்டின் இடைக்கால அதிபராக ரனில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில் இடைக்கால அதிபரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்ரம் சிங்கே உள்ளிட்ட மூவர் களம் கண்டனர். இந்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க 144 வாக்குகள் பெற்று இலங்கையின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கே
இலங்கையின் எட்டாவது அதிபராக ரணில் விக்கிரமசிங்கே நாடாளுமன்றத்தில் இன்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 15ஆம் தேதி தற்காலிக அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்று கொண்ட நிலையில் இன்று தேர்தலை சந்தித்தார். அதில் அவரது கட்சி சார்பில் ஒரே ஒரு எம்பியாக மட்டுமே இருந்தாலும் பெரும்பான்மையுடன் மீண்டும் அதிபயாராய் இருக்கிறார் ரணில் விக்கிரமசிங்க. 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை அவர் பதவியில் தொடர்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ப.சிதம்பரம்
இந்நிலையில் இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் போராட்டங்கள் முடிவுக்கு வராது என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்," "ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சக்களைப் போலவே செல்வாக்கற்றவராக இருந்தார். அவருக்கு எதிராகவும் போராட்டம் நடத்தப்பட்டது. இலங்கையின் ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் போராட்டங்கள் முடிவுக்கு வராது

மேலும் மோசமடையலாம்
இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் இலங்கை மக்களிடையே ஒற்றுமை மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தாது என நான் அஞ்சுகிறேன், இலங்கையில் நிலவும் கொந்தளிப்பு தொடர்ந்தும், பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடையலாம் என நான் கவலைப்படுகின்றேன்" என பதிவிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை நாட்டை மீட்டெடுக்க பல்வேறு உலக நாடுகளின் உதவியை எதிர்பார்த்து காத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

மக்கள் போராட்டம்
இந்நிலையில் தான் ப.சிதம்பரத்தின் இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. ப.சிதம்பரம் சொன்னது போலவே ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் அதிபராக நாடாளுமன்றத்தில் தேர்தெடுக்கப்பட்டார் என்ற செய்தி வெளியான போதே, இலங்கையின் பல பகுதிகளில் மக்கள் போராட்டம் தீவிரமாகியது. குறிப்பாக இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை முன்னர் திரண்ட போராட்டக்காரர்கள் ரணில் பதவி விலக வேண்டுமென முழக்கங்களை எழுப்பினர்.












Click it and Unblock the Notifications