பரபரப்பு! பெகாசஸ் விவகாரத்தில் விசாரணை தேவை.. உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்
டெல்லி: பெகாசஸ் விவகாரம் தற்போது மீண்டும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் என்எஸ்ஓ நிறுவனம் தயாரித்த சாப்டவேர் தான் பெகாசஸ். இதன் மூலம் ஒருவரது செல்போனை ஒட்டுமொத்தமாகக் கண்காணிக்கலாம்.

இந்த மென்பொருளை பல்வேறு நாடுகளின் அரசு அமைப்புகளுக்கு இஸ்ரேல் விற்பனை செய்கிறது. பயங்கரவாதிகளைக் கண்டறிய மட்டுமே இந்த மென்பொருளை பயன்படுவதாக இஸ்ரேல் தெரிவித்து வருகிறது,
இருப்பினும், இந்தியாவில் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரின் மொபைல்போன்கள் பெகாசஸ் மூலம் கண்காணிக்கப்பட்டதாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இந்த விவகாரம் அப்போது மிகப் பெரியளவில் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்தச் சூழ்நிலையில், பெகாசஸ் விவகாரம் குறித்து சமீபத்தில் தி நியூயார்க் டைம்ஸ் இதழ் கட்டுரை வெளியிட்டுள்ள மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியது. அதில் கடந்த 2017இல் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் சென்ற போது அதிநவீன ஆயுதங்கள் மற்றும் நுண்ணறிவு தொடர்பாகப் போடப்பட்ட ஒப்பந்தத்தில் பெகாசஸ் மையப்புள்ளியாக இருந்ததாகக் கூறப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ள நிலையில், இந்த விவகாரத்தை பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்தச் சூழலில் பெகாசஸ் விவகாரம் தற்போது மீண்டும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications