டெல்லியில் இன்று தொடங்கும் ஏஐ உச்சி மாநாடு.. குவியும் உலக தலைவர்கள்! ஏன் முக்கியம் தெரியுமா?
டெல்லி: டெல்லியில் இன்று ஏஐ உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இன்று முதல் வரும் 20 ஆம் தேதி வரை 5 நாட்கள் ஏஐ உச்சி மாநாடு நடக்கிறது. ஏஐ உச்சி மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரேசில், பிரான்ஸ் உள்பட 45 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.
ஏஐ டெக்னாலஜி தகவல் தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியையே ஏற்படுத்திவிட்டது. பல்வேறு துறைகளிலும் ஏஐ பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அலுவல் பணி மட்டும் இன்றி மருத்துவம், பாதுகாப்புத்துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்தாக மாறத்தொடங்கியுள்ளது.

ஏஐ உச்சி மாநாடு
செயற்கை நுண்ணறிவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக செயற்கை நுண்ணறிவு மாநாடு நடத்தப்படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு பிரிட்டனில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. பிரிட்டனில் உள்ள பக்கிங்ஹாம் ஷயர் பிளெச்லி பூங்காவில் நடைபெற்றது.
2024-ல் தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்றது. கடந்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலும் ஏஐ உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறுகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்த ஏஐ மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
20 நாடுகளின் தலைவர்கள்
5 நாட்கள் இந்த மாநாடு நடைபெறும். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியா குத்ரோஸ், இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க, பிரேசில் அதிபர் லூயிஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேகிறார்கள். ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் அபுதாபி பட்டத்து இளவரசர் காலித் பின் முகமது அல்நயான் கலந்து கொள்கிறார்.
மொத்தம் 20 நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க இருக்கிறார்கள். அதேபோல டாப் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் உதாரணமாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் தலைவர் பிராட் ஸ்மித், ஓபன் ஏஐ சி இஓ சாம் அல்ட்மேன் உள்ளிட்ட ஏஐ நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.
300-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள்
மக்கள், பூமி, வளர்ச்சி என்பதை மையக்கருத்தாக கொண்டு இந்த ஏஐ மாநாடு நடைபெறுகிறது. ஏஐ தொழில்நுட்பம், அறிவியல் - ஆராய்ச்சி, புதுமை கண்டுபிடிப்பு உள்ளிட்ட 7 துறைகளில் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் சுமார் 3,500 ஏஐ தொழில்நுட்ப நிபுணர்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.
அதேபோல, இந்தியா ஏஐ இம்பாக்ட் எக்ஸ்போ 2026 கண்காட்சியும் இன்று தொடங்குகிறது. 10 பெரிய அரங்குகளில் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் 300 க்கும் மேற்பட்ட பிரத்யேக கண்காட்சி அரங்குகள் மற்றும் நேரடி செயல்முறை விளக்கங்கள் நடைபெறும். உலகளாவிய தொழில் நுட்ப நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் அரசு அமைப்புகள் பங்கேற்க உள்ளன.
இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
குறிப்பாக ஹைடெக் நிறுவனங்கள் தங்களின் புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்த உள்ளன. ரஷ்யா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 13 நாடுகளின் பிரத்யேக தூதரக அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இன்று மாலை 5 மணியளவில் இந்த கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ஏஐ துறையில் புதிய வணிக வாய்ப்புகள் உருவாக்கவும் உலகாளாவிய கூட்டாண்மையை வலுப்படுத்தும் முயற்சியாகவும் இந்த கண்காட்சி முக்கிய பங்காற்றும் என்று தெரிகிறது.
-
ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. டெல்லியில் குலுங்கிய வீடுகள்! மக்கள் அச்சம்! -
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள்











Click it and Unblock the Notifications