“வெடிக்கும்” நிலையில் இந்திய பணவீக்கம்.. அப்படின்னா என்ன? ஒரே வரியில் வகுப்பெடுத்த ரகுராம் ராஜன்
டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவடைந்ததுடன் பணவீக்கமும் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் பணவீக்கம் என்றால் என்ன என்று ஒரே வரியில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி.க்கு பிறகு கடந்த 5 ஆண்டுகளாகவே விலைவாசி உயர்வு, எரிபொருள் விலையேற்றம் போன்றவை ஏற்பட்டு உள்ளன. இதனால் இந்தியாவில் பொருளாதார மந்தநிலை, வேலையின்மை போன்றவை ஏற்பட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.
இந்திய ரூபாயின் மதிப்பும் அமெரிக்க டாலருக்கு நிகராக கடந்த 6 ஆண்டுகளாகவே தொடர் சரிவை எதிர்கொண்டு வருகிறது. இதற்கு இடைபட்ட காலத்தில் உலகம் முழுவதும் அச்சுறுத்திய கொரோனா வைரல் தொற்றால் இந்தியா உட்பட உலக நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தன. ஏற்றுமதி இறக்குமதி முடங்கியதால் வளர்ந்து வரும் நாடுகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டன.

ரஷியா - உக்ரைன் போர்
அதிலிருந்து மீண்டு வருவதற்குள் ரஷியா - உக்ரைன் நாடுகளிடையே வெடித்த போர் காரணமாக சர்வதேச அளவில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதன் விளைவாக எரிபொருள் மற்றும் தங்கத்தின் விலை உயர்ந்தன. விலையேற்றம் காரணமாக பணவீக்கமும் பெருகி இருக்கிறது. இந்தியாவில் பணவீக்கம் மோசமான நிலையை அடைந்து இருக்கிறது.

டாலர் மதிப்பு உயர்வு
இந்திய பங்குச்சந்தைகளும் கடுமையான சரிவை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக பல நாடுகளின் நாணய மதிப்பு சரிவடைந்து வருவதால், முதலீடுகள் அனைத்தையும் டாலருக்கு மாற்ற நாடுகள் முடிவு செய்ததால் டாலரின் மதிப்பு கடுமையாக உயர்ந்து வருகிறது. அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதும் டாலர் மதிப்பு உயர்வதற்கு காரணமாக கூறப்படுகிறது.

பணவீக்கம்
இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் மக்களவையில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவில் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை, ஓமைக்ரான், உக்ரைன் - ரஷியா போர், சீனாவில் ஊரடங்கால் உதிரிபாகங்கள் வரத்து தடைப்பட்ட சூழலிலும் பணவீக்கம் 7% க்கும் குறைவாகவே உள்ளது.

ரகுராம் ராஜன்
ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளை முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனும் பாராட்டி இருக்கிறார். சீனா, பாகிஸ்தானைவிட இந்தியாவின் கடன் குறைவாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்." என்றார். இந்த நிலையில் ரகுராம் ராஜன் ட்விட்டரில் #Inflation என்ற ஹேஷ்டேக்குடன் ட்விட்டரில் ஒருபதிவை வெளியிட்டு இருந்தார். அதில், "இது நீங்கள் எவ்வளவு உருவாக்குகிறீர்கள் என்பதை பொறுத்தது அல்ல. நீங்கள் உருவாக்கியதில் இருந்து எவ்வளவு பெறுகிறீர்கள் என்பதை பொறுத்தது." என குறிப்பிட்டுள்ளார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications