கட்டுப்பாட்டில் வந்த உலகின் 50% தங்கம்! பிரிக்ஸை வைத்து இந்தியா ஆடிய கேம்! ஸ்டன் ஆகி நின்ற டிரம்ப்
டெல்லி: பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு, அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதை வெகுவாகக் குறைத்து, தங்கக் குவிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக பிரிக்ஸ் நாடுகள் உலக தங்க இருப்புக்களில் சுமார் 20% மட்டுமே வைத்திருந்தாலும், பிரிக்ஸ் நட்பு நாடுகளுடன் சேர்ந்து உலகளாவிய தங்க உற்பத்தியில் சுமார் 50%ஐ தற்போது கட்டுப்படுத்துகின்றன.
தங்கம் வாங்கும் முயற்சியில் ரஷ்யாவும், சீனாவும் முன்னணியில் உள்ளன. 2024ஆம் ஆண்டில், சீனா 380 டன்கள் தங்கத்தை உற்பத்தி செய்தது, அதேசமயம் ரஷ்யா 340 டன்கள் பங்களித்தது. மேலும், இந்த உத்தியைப் பின்பற்றி, 2025 செப்டம்பரில் பிரேசில் 16 டன்கள் தங்கத்தை வாங்கியது. இது 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்நாடு மேற்கொண்ட முதல் தங்க கொள்முதல் ஆகும்.

இந்தியா தங்கம்
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை சுமார் 600 கிலோ தங்கத்தை தனது சேமிப்பில் சேர்த்துள்ளது. தொடர்ந்து இந்தியா தங்கத்தை அதிக அளவில் வாங்குகிறது. இதன் மூலம், செப்டம்பர் இறுதி வாரத்தில் மொத்த தங்க இருப்பு 880 டன்களாக அதிகரித்துள்ளது.
செப்டம்பர் 30-ல் முடிவடைந்த காலாண்டில் மத்திய வங்கிகளின் தங்க கொள்முதல், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 10% அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு 199.5 டன்னாக இருந்த கொள்முதல் தற்போது உயர்ந்துள்ளது. தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளாக சரிந்த கொள்முதலுக்குப் பிறகு இந்த உயர்வு குறிப்பிடத்தக்கது. வரலாறு காணாத விலை ஏற்றம் இருந்தபோதிலும், தங்கத்தின் மீது மத்திய வங்கிகளின் தீவிர ஈடுபாட்டை இது காட்டுகிறது.
இந்த ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், மத்திய வங்கிகளின் தங்க கையிருப்பு 634 டன்களாக உள்ளது. இது 2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் வாங்கப்பட்ட 724 டன்களுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவு.
டிஜிட்டல் தங்க முதலீடுகள், அதாவது எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகள் (ETFs) மற்றும் அதுபோன்ற கருவிகள், கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இது 221 டன்களாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 134% அதிகமாகும், மேலும் முந்தைய காலாண்டைக் காட்டிலும் 30% அதிகமாகும்.
பிரிக்ஸ் ஆடும் கேம்
பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் இந்த நிலை குறித்து யா வெல்த் நிறுவனத்தின் இயக்குனர் அனுஜ் குப்தா ஊடகங்களிடம் கூறுகையில், "பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் தங்கத்தை அதிகமாக உற்பத்தி செய்வதுடன், குறைவாக விற்கவும் செய்கின்றன. அதே நேரத்தில், சர்வதேச சந்தையிலிருந்தும் தங்கத்தை வாங்கி வருகின்றன. 2020 முதல் 2024 வரை, பிரிக்ஸ் நாடுகளின் மத்திய வங்கிகள் உலக தங்கத்தின் 50%க்கும் அதிகமாக வாங்கி உள்ளன, இந்தத் தகவல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அதிர்ச்சி அளிக்க கூடியதாக இருக்கலாம்" என்று தெரிவித்தார்.
இன்று, பிரிக்ஸ் பொருளாதாரங்கள் உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 30% பங்களிக்கின்றன. விரைவில் பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்கு என்று ஒரு நாணயத்தை உருவாக்கும் சூழலும் உள்ளது. ஏற்கனவே தங்க மார்க்கெட்டை கட்டுப்படுத்தும் பிரிக்ஸ், இந்த நாணயம் வந்தால் கண்டிப்பாக அமெரிக்காவிற்கு மிகப்பெரிய அளவில் செக் வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications