Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

35 துண்டுகளான ஷ்ரத்தா.. காதலன் அப்தாப்பின் "வெறித்தனம்.." சிக்கிய வீடியோ.. சிக்கல்தான்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியை உலுக்கிய ஷர்த்தா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அப்தாப் தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக ஒரு ஆடியோ கிளிப் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இந்த வழக்கில் முக்கிய ஆவணமாக இது இருக்கும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் வசாய் நகரை சேர்ந்த இளம்பெண் ஷ்ரத்தா. மும்பையில் கால் சென்டரில் பணியாற்றி வந்த ஷர்த்தாவுக்கும் அப்தாப் அமீன் என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

டெல்லியில் இவர்கள் இருவரும் லிவிங் டுகெதர் முறையில் வசித்து வந்தனர். ஷ்ரத்தா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியதால், அவரை கொலை செய்த அப்தாப், அந்தக் கொலையை மறைக்க செய்த காரியங்கள் அனைத்தும் கிரைம் திரில்லர் படங்களை மிஞ்சும் அளவுக்கு அமைந்தது. இந்தக் கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

நடுநடுங்க வைக்கும் கொலை

நடுநடுங்க வைக்கும் கொலை

கடந்த மே மாதமே ஷ்ரத்தாவை கொலை செய்த அப்தாப், கொலையை மறைப்பதற்காக செய்த காரியங்கள் அனைத்தும் நடுநடுங்க வைக்கும் அளவுக்கு இருந்தது. ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டிய அப்தாப், உடலை வைப்பதற்காக புதிதாக பிரிட்ஜ் ஒன்றை வாங்கி அதில் பல நாட்கள் உடலை வைத்திருந்து ஒவ்வொரு பாகங்களாக டெல்லியின் மெஹரலி பகுதியில் உள்ள வனப்பகுதியில் வீசியது தெரியவந்தது. தனது மகளை காணவில்லை என ஷ்ரத்தாவின் தந்தை புகார் அளித்த பிறகே இந்தக் கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

 ஆவேசமாக சண்டையிடும் உரையாடல்கள்

ஆவேசமாக சண்டையிடும் உரையாடல்கள்

அப்தாபின் தில்லாலங்கடி வேலைகளை கண்டுபிடித்த போலீசார் அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினர். தற்போது நீதிமன்றக் காவலில் அப்தாப் அமீன் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், பல்வேறு முக்கிய ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். இதனிடையே, இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக அப்தாப்- ஷரத்தா இடையே வாக்குவாதம் நடைபெறும் வீடியோ ஒன்று போலீசாரிடம் சிக்கியுள்ளது. இந்த வீடியோ கிளிப்பில் அப்தாப் அமீன், ஷர்த்தாவிடம் ஆவேசமாக உரையாடல்கள் பதிவாகியுள்ளன.

மும்பையில் நடைந்த வாக்குவாதம்

மும்பையில் நடைந்த வாக்குவாதம்

இந்த அப்தாப்பும் ஷ்ரத்தாவும் ஆவேசமாக உரையாடிக்கொள்ளும் இந்த வீடியோ பதிவுகள் மும்பையில் நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த உரையாடலின் போது அப்தாப்பிடம் ஷர்த்தா, வாக்குவாதம் செய்ய வேண்டாம் என்று சொல்வது பதிவாகியுள்ளது. பதிலுக்கு சண்டை போட வேண்டாம் என்று அப்தாப் கூறும் காட்சிகளும் இடம் பெற்றிருப்பதாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் கூறியதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், " இந்த வீடியோவின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டால் இருவருக்கும் இடையே மோதல் இருந்தது நிரூபணம் செய்யப்படும். எனினும் இந்த வீடியோ ஆதாரங்கள் குறித்து தற்போத விரிவாக சொல்ல முடியாது. டெல்லியில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தில் முகத்தை அடையாளம் காணும் சோதனை நடத்தப்படும். இந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்பதை அப்தாப் மறுக்க முடியாததை உறுதி செய்வதற்காக இது நடத்தப்படும்'என்று கூறப்பட்டது.

முக்கிய திருப்புமுனையாக இருக்கும்

முக்கிய திருப்புமுனையாக இருக்கும்

இதனிடையே, அப்தாப் - ஷர்த்தா இடையே நடைபெற்ற ஆடியோ உரையாடல் கிளிப் ஒன்றும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து அப்தாப்பின் குரல்தான் என்பதை உறுதி செய்யும் நோக்கில் டெல்லி நீதிமன்றத்தில் அப்தாப்பிற்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்த டெல்லி போலீசார் முறையிட்டனர். இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் குரல் மாதிரி பரிசோதனை நடத்த அனுமதி அளித்தது. இதையடுத்து டெல்லியில் உள்ள சிபிஐ தடயவியல் குழு அப்தாப்பின் குரல் மாதிரிகளை சேகரித்துள்ளது. இந்த வழக்கில் முக்கிய திருப்புமுனையாக இந்த ஆடியோ கிளிப் இருக்கும் என்றும் டெல்லி போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

கடும் ஆட்சேபம் தெரிவித்த வழக்கறிஞர்

கடும் ஆட்சேபம் தெரிவித்த வழக்கறிஞர்

முன்னதாக அப்தாப்பிடம் குரல் மாதிரி எடுக்க அப்தாப்பின் வழக்கறிஞர் கடும் ஆட்சேபம் தெரிவித்து இருந்தார். எனினும் நார்கோ அனலிசிஸ் மற்றும் பாலிகிராப் சோதனைக்கு மட்டுமே குற்றம் சாட்டபட்டவரின் ஒப்புதல் கோரப்படும் என்று கூறிய நீதிமன்றம் குரல் மாதிரியை சேகரிக்க போலீஸ் தரப்புக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக வீடியோ கான்பரன்ஸ் மூலமாக அப்தாப் ஆஜர்படுத்தப்பட்டு இருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+