டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 நிமிடம்தான்.... ரூ16 கோடி விலை உயர்வு... அயோத்தி ராமர் கோவில் நிலத்தின் பெயரால் மெகா மோசடி?

Google Oneindia Tamil News

டெல்லி: அயோத்தி ராமர் கோவில் நிலத்தின் பெயரால் மெகா மோசடி நடந்துள்ளதாக சமாஜ்வாதி, ஆம் ஆத்மி கட்சிகள் ஆதாரங்களை வெளியிட்டு குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ராமர் கோவில் நிலம் சந்தை விலையை விட குறைவாகவே வாங்கப்பட்டதாக ராமஜென்மபூமி அறக்கட்டளை விளக்கம் அளித்துள்ளது.

இனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா? இதை படிங்க! இனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா? இதை படிங்க!

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ராமஜென்மபூமி இருக்கும் இடம் அருகே நிலத்தை வாங்கி வருகிறது ஶ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா (Shri Ram Janmabhoomi Teerth Kshetra) அறக்கட்டளை. இந்த அறக்கட்டளை நிலம் வாங்கியதில் மிகப் பெரும் மோசடி நடந்துள்ளது என்பது சமாஜ்வாதி மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் குற்றச்சாட்டு.

சமாஜ்வாதியின் பவன் பாண்டே

சமாஜ்வாதியின் பவன் பாண்டே

சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் பவன் பாண்டே இது தொடர்பாக அயோத்தியில் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது பவன் பாண்டே கூறியதாவது: ராம ஜென்மபூமி அருகே நிலம் ஒன்று மார்ச் மாதம் 18-ந் தேதியன்று சுல்தான் அன்சாரி, ரவி மோகன் ஆகியோருக்கு ரூ2 கோடிக்கு விலைக்கு விற்கப்பட்டது.

சில நிமிடங்களில் ரூ18.5 கோடிக்கு பத்திரம்

சில நிமிடங்களில் ரூ18.5 கோடிக்கு பத்திரம்

இந்த விற்பனை பதிவு முடிந்த சில நிமிடங்களிலேயே அதே நிலத்தை ரூ18.5 கோடிக்கு ஶ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வாங்கி இருக்கிறது. சில நிமிடங்களிலேயே ஒரு நிலத்தின் விலை எப்படி ரூ16 கோடிக்கு உயர்ந்திருக்கும்? இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு பவன் பாண்டே கூறினார்.

ஆம் ஆத்மி சஞ்சய் சிங்

ஆம் ஆத்மி சஞ்சய் சிங்

இதேபோல் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான சஞ்சய் சிங் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது உலகில் எந்த ஒரு நிலமும் வினாடிக்கு ரூ5.5 லட்சம் விலை உயர்ந்தது கிடையாது. இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி முறைகேடுகளில் ஈடுபட்டோரை சிறையில் அடைக்க வேண்டும் என்றார்.

காங்கிரஸ் கண்டனம்

காங்கிரஸ் கண்டனம்

மேலும் பவன் பாண்டே, சஞ்சய் சிங் இருவருமே இந்த நிலப் பதிவு தொடர்பான ஆதாரங்களையும் வெளியிட்டனர். இதேபோல் ராமர் கோவிலுக்கு நிலம் வாங்குகிறோம் என்ற பெயரில் நடந்துள்ள இந்த மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தி உள்ளது.

ராமஜென்மபூமி அறக்கட்டளை விளக்கம்

ராமஜென்மபூமி அறக்கட்டளை விளக்கம்

ஆனால் இந்த மோசடி புகார்களை ராமஜென்மபூமி அறக்கட்டளை நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக அறக்கட்டளையின் சம்ப்ராத் வெளியிட்ட அறிக்கையில், ராமர் கோவிலுக்கான நிலம் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டது. ஏற்கனவே நிலத்தின் உரிமையாளர்கள் விற்ற நிலத்துக்கு பதிவுதான் அன்றைய தினம் செய்தனர் என விளக்கம் அளித்திருக்கிறார். இந்த மோசடி புகார் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

English summary
SP, APP had alleged that the scam in Ram mandir trust's land deal in Ayodhya.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X