வடக்கு.. ‘பெரிய பிளான்’.. கனிமொழி மூலம் ஸ்டாலின் போடும் கணக்கு.. காங். சிக்னல்.. பாஜகவுக்கு சிக்கல்!
டெல்லி : 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கூட்டணி தான் என உறுதி செய்துள்ளார் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின். மேலும், பாஜகவுக்கு எதிரான கூட்டணியை இந்திய அளவில் வலுவானதாக அமைக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஸ்டாலின். அதற்கான முக்கியமான அடியை திமுக எம்.பி கனிமொழி வாயிலாக எடுத்து வைத்துள்ளார் ஸ்டாலின்.
காங்கிரஸ் தலைமையில், நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மெகா கூட்டணியை அமைக்க வேண்டும் என்பது ஸ்டாலினின் விருப்பமாக உள்ளது. இதனை பல நிகழ்வுகளில் வெளிப்படுத்தியுள்ளார் ஸ்டாலின்.
அந்தவகையில், தனது விருப்பத்தை மீண்டும் வலுவாகத் தெரிவிக்கும் வகையில், திமுக எம்.பி கனிமொழியை வடக்கிற்கு அனுப்புகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.
இதன் மூலம், காங்கிரஸ் கட்சிக்கும், நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகளுக்கும் முக்கியமான சிக்னலை கொடுக்கிறார் ஸ்டாலின் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ஸ்டாலின் எண்ணம்
காங்கிரஸ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளுடன் விரோதப் போக்கைக் கடைபிடிப்பதை திமுக தலைவர் ஸ்டாலின் விரும்பவில்லை. 2024 தேர்தலுக்கு முன்பாக நாடு தழுவிய அளவில் பவர்ஃபுல்லான கூட்டணியை உருவாக்கினால் தான் பாஜகவை வெல்ல முடியும் என்கிற கருத்தில் உறுதியாக இருக்கிறார் ஸ்டாலின். இதனால், மூன்றாவது பெரிய அணியை அமையவிடாமல் காங்கிரஸ் கட்சி மெகா கூட்டணியை அமைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

எதிர்க்கட்சிகளுடன் இணக்கம்
காங்கிரஸ் தலைமையுடன் சுமூகமான உறவைக் கையாண்டு வரும் ஸ்டாலின், அதேநேரம், காங்கிரஸ் நேரடி மோதலில் ஈடுபட்டு வரும் மாநிலங்களில் ஆளும் கட்சிகளான டிஎம்சி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுடனும் நெருக்கத்தைக் கடைபிடித்து வருகிறார். இது காங்கிரஸாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தினாலும், பாஜகவை எதிர்க்க வலிமையான கூட்டணி அமைப்பது அவசியம் என்றும், ஸ்டாலின் அதற்கு பாலமாகச் செயல்பட விரும்புகிறார் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

கனிமொழி + ஸ்டாலின் பிளான்
இந்நிலையில் தான், தனது விருப்பத்தை தெளிவாக உணர்த்தும் வகையில், ஹரியானா மாநிலத்தில் நடைபெற இருக்கும் இந்திய லோக் தள் கட்சியின் பேரணிக்கு தனது சகோதரியும் திமுக எம்பியுமான கனிமொழியை அனுப்பி வைக்கிறார் ஸ்டாலின். 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு எதிரான சக்திகளின் ஒருங்கிணைப்பை இந்தப் பேரணி வலுப்படுத்தும் என்ற திட்டத்தோடு இந்த முயற்சியில் ஸ்டாலின் இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸுக்கு எதிரி கட்சி
ஹரியானாவில் உள்ள இந்திய லோக் தள் கட்சி, அம்மாநிலத்தில் காங்கிரஸுக்கு எதிராக உள்ள கட்சி. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தள், ஜன்னயக் ஜனதா கட்சி ஆகியவை தனித்துப் போட்டியிட்ட நிலையில், பாஜக 40 இடங்களில் வென்று ஜேஜேகே ஆதரவுடன் ஆட்சியமைத்தது. காங்கிரஸ் 31 இடங்களில் மட்டுமே வென்றது. இந்நிலையில், இந்திய லோக் தள் நடத்தும் பேரணிக்கு, காங்கிரஸ் கூட்டணியில் உறுதியாக இருக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பது தேசிய அரசியலில் பெரும் கவனம் பெற்றுள்ளது.

சவுதாலாவின் அழைப்பு
இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் நிறுவனரும், ஹரியானா முன்னாள் முதல்வரும், முன்னாள் துணை பிரதமருமான தேவிலாலின் 109வது பிறந்த நாள் விழா நாளை மறுநாள் ஹரியானா மாநிலம் ஃபதேஹாபாத்தில் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, இந்திய லோக் தள் கட்சியின் சார்பில் பிரமாண்ட பேரணி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்கும்படி பல்வேறு மாநில கட்சிகளுக்கு, குறிப்பாக பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு, இந்திய லோக் தள் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா அழைப்பு விடுத்துள்ளார்.

பாஜகவுக்கு எதிரான பேரணி
இந்தப் பேரணியில் திமுக எம்.பி கனிமொழி, தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே,உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உயர்மட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை எடுத்துக்காட்டுவதோடு, பா.ஜ.கவிற்கு எதிரான பேரணியாகவும் இருக்கும் என்று கருதப்படுகிறது. அன்றைய தினம் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள்
ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோரும் பேரணியில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளனர். திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோரும் பேரணியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எத்ர்க் கட்சிகளுக்கு
ஐஎன்எல்டி தலைவரும், ஹரியானா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சவுதாலா, காங்கிரஸ் கட்சிக்கும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல மாநில கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அவர்களும் கலந்துகொள்ளும் பட்சத்தில் இது பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் அறைகூவலாக அமையும்.
-
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications