Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாளைக்கே சீனாக்காரன் நம்ம கூட சண்டைக்கு வந்தா என்ன பண்ணலாம்.. நிபுணர்கள் முன்வைக்கும் யோசனை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே வரும் 2020-க்குள் போர் ஏற்பட வாய்ப்பிருப்பதாக இந்திய நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த 1962-ஆம் ஆண்டு சீனா- இந்தியாவுக்கு இடையே போர் நடைபெற்றது. அப்போது சீனா, லடாக் மற்றும் மக்மோகன் கோட்டுக்கு அருகே எல்லையை கடந்து வந்து தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு டோக்லாம் பகுதியை சீனா கைப்பற்றியதை அடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இந்த டோக்லாம் பகுதியானது பூடானுக்கு சொந்தமானது. எனினும் அது எல்லை பகுதி என்பதால் இந்தியா பாதுகாத்து வருகிறது. இந்த டோக்லாமை கைப்பற்றினால் இந்தியாவின் வடகிழக்கு பகுதியை எளிதில் கைப்பற்றிவிடலாம் என்பதால் அதற்கான முயற்சிகளில் சீனா இறங்கியுள்ளது.

போர் பதற்றம்

போர் பதற்றம்

இந்த நேரத்தில் சீன படைகள் திரும்ப செல்லாததால் இந்தியா போர் தொடுக்கும் நிலை ஏற்பட்டது. எனினும் நீண்ட நாட்களுக்கு பிறகு சீன படைகள் டோக்லாம் பகுதியிலிருந்து வெளியேறியதால் போர் பதற்றம் தணிந்தது.

போர் வாய்ப்புகள்

போர் வாய்ப்புகள்

இந்த நிலையில் இரு நாடுகளுக்கிடையே மீண்டும் 2012-ஆம் ஆண்டு போர் வரும் என தெரிவித்தனர். பின்னர் பீஜிங் ஒலிம்பிற்கு பிறகு போர் வரும் என்றார்கள். ஆனால் தற்போது அந்த நிபுணர்களே வரும் 2020-இல் போர் வர வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவித்தனர்.

தோல்வி

தோல்வி

தற்போது சர்வதேச அளவில் பொருளாதார ரீதியில் வளர்ந்து வரும் நாடுகளுள் இந்தியாவும், சீனாவும் முக்கியமானதாகும். இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் வந்தாலும் அவை கடந்த 5-ஆம் நூற்றாண்டுகளில் ஏதென்ஸ் மற்றும் ஸ்பார்ட்டா இடையே வந்த போரை போல் வெற்றி தோல்வி இன்றி முடியும்.

வடகிழக்கு

வடகிழக்கு

அவ்வாறு போர் வந்தால் ஏராளமான பொருட்சேதத்தை கொடுக்கும், ஏராளமானோர் காயமடையும் சூழலும் ஏற்படும் என இந்திய வல்லுனர்கள் தெரிவித்தனர். இரு நாடுகளுக்கிடையே போர் ஏற்பட எல்லை பிரச்சினை எழலாம். இந்தியாவின் எல்லை வடமேற்கில் அதன் வடகிழக்கு வரை ஒரு வளைவாக செல்கிறது.

தீர்த்துக் கொள்ள வேண்டும்

தீர்த்துக் கொள்ள வேண்டும்

இதனால் எல்லை எங்குள்ளது என தெரியவில்லை. 70 ஆண்டுகளுக்கு முன்னர் மக்மோகன் எல்லைக்கோடு உருவாக்கப்பட்ட போதிலும் எல்லை என்பது தெளிவாகவில்லை. இது போன்ற பிரச்சினைகளை போர் மூலம் தீர்த்து கொள்ளாமல் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்து கொள்வதே சரியானதாகும் என்கின்றனர் நிபுணர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+