Korean love game: "ஸாரி அம்மா, ஸாரி அப்பா!" கொரிய கேமிற்கு அடிமையான 3 சகோதரிகள்.. லெட்டர் எழுதி வைத்துவிட்டு தற்கொலை
டெல்லி: தேசிய தலைநகர் பகுதிக்கு உட்பட்ட காசியாபாத்தில் ஆன்லைன் கேமிற்கு அடிமையான சிறுமிகளைப் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சகோதரிகள் மூன்று பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் கேம் விளையாட்டைக் கண்டித்ததால் நள்ளிரவில் மாடியில் இருந்து குதித்து இவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் காலத்தில் குழந்தைகள் சின்ன சின்ன விஷயத்திற்குக் கூட மோசமான முடிவுகளை எடுத்துவிடுகிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் துணிச்சலாக இருந்தாலும் சில குழந்தைகள் சட்டென விபரீத முடிவை எடுத்துவிடுகிறார்கள். அப்படியொரு மோசமான சம்பவம் தான் தேசிய தலைநகர் பகுதிக்கு உட்பட்ட காசியாபாத்தில் நடந்துள்ளது.

கண்டிப்பு
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து சிறுமிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்கள் குடியிருப்பின் 9வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அந்தச் சிறுமிகள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையான நிலையில், பெற்றோர் அவர்களைக் கண்டித்துள்ளனர்.
இதைத் தாங்கிக் கொள்ள முடியாத அந்த மூன்று சிறுமிகளும் லெட்டர் எழுதி வைத்துவிட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதில் உயிரிழந்த சிறுமிகள் 12 வயது பாக்கி, 14 வயது பிராச்சி, 16 வயது விஷிகா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தச் சகோதரிகள் மூன்று பேருமே ஒன்றாகவே வளர்ந்துள்ளனர். எழுந்து ரெடி ஆவது, பள்ளி செல்வது உட்பட அனைத்து அன்றாடச் செயல்களையும் ஒன்றாகவே செய்தனர்.
பின்னணி
கொரோனா காலகட்டத்தில் இவர்கள் முதலில் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட ஆரம்பித்துள்ளனர். கொரிய லவ் தொடர்பான ஆன்லைன் டாஸ்க் கேமை இவர்கள் விளையாடியுள்ளனர்.. சில காலத்திலேயே இந்த விளையாட்டிற்கு அவர்கள் அடிமையாகிவிட்டனர். பள்ளிக்கு லீவ் போட்டு விளையாடும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. இதனால் ஆன்லைன் கேம் விளையாடக்கூடாது எனப் பெற்றோர் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
விபரீதம்
இதை ஏற்றுக்கொள்ள முடியாத அந்த சகோதரிகள் இந்த மோசமான முடிவை எடுத்துள்ளனர். பாரத் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை 2- 2.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது. மூன்று சிறுமிகளும் 9வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதிகாலை நேரத்தில் திடீரென ஏதோ சத்தம் கேட்டுள்ளது. இதனால் அங்கிருந்தவர்கள் போலீசாரிடம் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தபோது தான் இந்த கொடூரம் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து முதற்கட்டமாகக் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், குழந்தைகள் வைத்திருந்த செல்போனையும் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். சைபர் வல்லுநர்கள் உதவியுடன் ஆன்லைன் பரிவர்த்தனை, யூசேஜ் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணை
மேலும், சிறுமிகளின் ரூமில் போலீசார் நடத்திய சோதனையில், ஒரு பக்கத் தற்கொலை கடிதத்தையும் கண்டுபிடித்தாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றனர். அதில், "அம்மா, அப்பா சாரி" என எழுதப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ஆன்லைன் கேம் விளையாட்டைக் கண்டித்ததால் சிறுமிகள் இப்படியொரு முடிவை எடுத்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாகச் சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.
-
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications