டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 78.56%- மத்திய அரசு

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 78.56% ஆக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

 TN and Six States report 78.56% daily Coronavirus Cases

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய ஆறு மாநிலங்களில் அன்றாட கொவிட் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 78.56 விழுக்காடு பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 56,211 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 31,643 பேரும், பஞ்சாபில் 2,868 பேரும், கர்நாடகாவில் 2,792 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவில் தற்போது 5,40,720 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 4.47 சதவீதமாகும்.

இன்று காலை 7 மணி வரை, 10,07,091 முகாம்களில்‌ 6.11 கோடி (6,11,13,354) பயனாளிகளுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

73-வது நாளான நேற்று (மார்ச் 29, 2021) நாடு முழுவதும் 5,82,919 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.

நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,13,93,021 ஆக (94.19%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 37,028 பேர் புதிதாக குணமடைந்துள்ளனர். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

English summary
Tamilnadu and Six States had reported 78.56% daily Coronavirus Cases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X