லாட்ஜுக்குள் காதலனுடன் நுழைந்த நர்ஸ்.. ரூம் கதவை திறந்தால்.. அலறி அலறி துடித்து.. திகில் தலைநகர்
நர்ஸ்ஸை பலாத்காரம் செய்த 4 பேர் கைதாகி உள்ளனர்
டெல்லி: பெண்களை தெய்வமாக மதிக்கும் நாடு என்று சொல்லிக் கொள்ளும் இந்த இந்தியாவில்தான், எத்தனை எத்தனை வன்கொடுமைகள்?? அதுவும் நம் தேசத்தின் தலைநகரிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது என்ற வருத்தமான கேள்வியை இங்கு நாம் எழுப்ப வேண்டி உள்ளது.. இதோ இன்னொரு ஷாக்..!
பொதுவாக கல்வியறிவு பெற்ற தேசம், முன்னேறிய தேசமாக கருதப்படும்.. ஒரு மனிதனுக்கு சிந்திக்கும் திறனும், கேள்வி கேட்கும் உரிமையும் இருந்தாலே போதும்.. நிச்சயம் அவன் சார்ந்து வாழும் சமுதாயம் எழுச்சி பெற்றுவிடும்..!
ஆனால், வடமாநிலங்களில் அப்படி ஒரு நிலைமை இதுவரை இல்லை.. பெரும்பாலான மாநிலங்களின் கிராமங்களில் கல்வி மறுக்கப்படுகிறது.. மறக்கடிக்கப்படுகிறது..

மூடநம்பிக்கைகள்
மாறாக, மூடநம்பிக்கைகளை அவர்கள் மீது மறைமுகமாக மற்றும் நேரடியாக திணிக்கும் போக்கும் தொடர்கிறது.. இவை எல்லாம் சேர்ந்துதான், மனிதனை சில சமயங்களில் மிருகமாக்கிவிடுகிறது.. பாட்டி, மகள், தங்கை, சிறுமி என பாகுபாடு இல்லாமல் சீரழிக்கப்படுகிறார்கள் சில கயவர்களால்.. பெண்கள் மீதான வன்முறை தாக்குதலும் இதுவரை குறைந்தபாடில்லை.. டெல்லியில் நடந்த கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

காதல்
அந்த இளம்பெண் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்.. 24 வயதாகிறது.. பெங்களூருவில் சஞ்சீவி நகர் பகுதியில் வசித்து வருகிறார். . இவர் அதே பகுதியில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.. இவருக்கும் ரஜத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. ரஜத் டெல்லியை சேர்ந்தவர்.. இவரும் பெங்களூரிலேயே தங்கி வேலை பார்க்கிறார்... இந்த நட்பு காதலாக மாறியுள்ளது.. காதலை முதலில் வெளிப்படுத்தி, பெண்ணை சம்மதிக்க வைத்ததே ரஜத் தான்.

ஹோட்டல் ரூம்
கடந்த 24ம் தேதி அன்று நைட் டின்னருக்காக ஒரு ஹோட்டலுக்கு காதலியை அழைத்து கொண்டு சாப்பிட சென்றார் ரஜத்.. அந்த ஹோட்டல் ரூம்கள் நிறைந்து கிட்டத்தட்ட லாட்ஜ் போல இருந்தது.. இருவருமே சாப்பிட்டுள்ளனர்.. ஆனால், இரவு நேரமாகிவிட்டதால், அங்கேயே ஒரு ரூம் எடுத்து தங்கிவிட்டு, காலையில் போகலாம் என்று நர்ஸிடம் சொல்லி உள்ளார் ரஜத்.. இதற்கு நர்ஸும் சம்மதம் சொல்லவும், உடனடியாக ரூம் போடப்பட்டு, இருவருமே ஒன்றாக உள்ளே நுழைந்தனர்.

நர்ஸ்
ஆனால் அங்கேதான் நர்ஸுக்கு ஒரு ஷாக் காத்திருந்தது.. அது காலி ரூம் இல்லை.. எற்கனவே 3 பேர் அந்த ரூமில் தங்கியிருந்தனர்.. அவர்கள் அனைவருமே ரஜத்தின் நண்பர்கள்.. யோகேஷ் குமார், தேவ் ஷரோய், ஷிவ் ராணா என்பது அவர்களின் பெயர்கள்.. அவர்களை பார்த்ததுமே, சுதாரித்து கொண்ட நர்ஸ், உடனடியாக ரூமை விட்டு வெளியேற முயற்சி செய்துள்ளார்.. ஆனால் 4 பேரும் சேர்ந்து, அந்த பெண்ணை மறித்து, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்..

மாறி மாறி பலாத்காரம்
அதற்கு பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் துடிதுடித்த அந்த பெண், அவர்களிடம் பிரச்சனை எதுவும் செய்யாமல் ரூமை விட்டு வெளியேற முடிவு செய்தார்.. ஒருவழியாக அங்கிருந்து வெளியேறி, சஞ்சீவி நகர் போலீசில் புகார் தந்தார்.. 4 பேரும் தன்னை மாறி மாறி பலாத்காரம் செய்ததாகவும், எத்தனையோ நண்பர்களை உதவிக்கு அழைத்தும் ஒருவரும் அந்த நேரத்தில் வரவில்லை, விடிகாலையில்தான் மீட்கப்பட்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்..

விசாரணை
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பாதிக்கப்பட்ட பெண்ணை மெடிக்கல் செக்கப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் உறுதியானது.. இதையடுத்து, சம்பந்தப்பட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.. விசாரணையும் மேற்கொண்டனர்.. அப்போதுதான், அந்த 4 பேருமே தேசிய அளவிலான நீச்சல் வீரர்கள் என்பதும், டிரெயினிங் எடுப்பதற்காக பெங்களூருவில் வந்து 3 மாதமாகவே ரஜத் தங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது... மற்ற நண்பர்கள் பெங்களூருவுக்கு வந்து ஒரு வாரம்தான் ஆகிறதாம்.. தொடர் விசாரணை நடக்கிறது..!
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications