Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வராதீங்க".. டெல்லி போகிற கேப்பில் போர்ட் வைத்த எடப்பாடி.. அதிமுக அலுவலகத்தில் என்ன நடக்கிறது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றுள்ள நிலையில் கட்சி தொண்டர்களுக்கு முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கி இருக்கிறார்.

அதிமுக அலுவலகத்திற்கு போடப்பட்ட சீல் சரியாக 10 நாட்கள் கழித்து அகற்றப்பட்டுள்ளது. அதிமுக அலுவலகம் முன் கடந்த ஜூலை 11ம் தேதி கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக எடப்பாடி, ஓபிஎஸ் தரப்பு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் அலுவலக சாவிகளை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என் சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

வெற்றிடம்

வெற்றிடம்

இந்த நிலையில் அதிமுக அலுவலகம் திறந்து இருந்தாலும் அந்த அலுவலகம் களையிழந்து காணப்படுகிறது. பெரிதாக நிரிவாகிகள் யாரும் அலுவலகத்திற்கு செல்லவில்லை. அங்கு தற்போது கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 150 போலீஸ் ஒரு ஷிப்டிற்கு என்று சுழற்சி முறையில் 450 போலீசார் அங்கு 3 ஷிப்டில் பணி செய்து வருகிறார்கள். அலுவலகம் நோக்கி வந்து ஒன்றிரண்டு தொண்டர்களை கூட போலீசார் அனுமதிக்கவில்லை.

திட்டம்

திட்டம்

இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபசார விழா நடைபெருகிறது. இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து அரசியல் தலைவர்கள் டெல்லி செல்ல இருக்கிறார்கள். டெல்லியில் நடக்கும் இந்த நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார்.இதற்காக அவர் டெல்லி சென்றுள்ளார்.

 சந்திக்க முடிவு

சந்திக்க முடிவு

இந்த நிலையில் டெல்லி சென்றுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி சார்பாக அதிமுக அலுவலகத்தில் போர்ட் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில், அதிமுக அலுவலகத்திற்கு தொண்டர்கள் யாரும் வர வேண்டாம். அடுத்த மாதம் 20ம் தேதி வரை யாரும் அலுவலகத்திற்கு வர வேண்டாம். கோர்ட் உத்தரவு இருப்பதால் அலுவலகம் வருவதை நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி அந்த போர்டில் கூறியுள்ளார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

அதிமுக அலுவலகம் திறந்த நிலையில் அதை காண பல நிர்வாகிகள் அங்கு வரும் திட்டத்தில் உள்ளனர். முக்கியமாக எடப்பாடி ஆதரவாளர்கள் பலர் அங்கே வந்து தீர்ப்பையும், எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளர் ஆனதையும் கொண்டாடும் திட்டத்தில் உள்ளனர். இதை தடுக்கவே எடப்பாடி இப்படி போர்ட் வைத்துள்ளார். 1 மாதத்திற்கு தொண்டர்களை அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது, என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இந்த கட்டுப்பாடுகளை எடப்பாடி விதித்துள்ளார்.

Recommended Video

    Modiஐ சந்திக்க போட்டி போடும் EPS, OPS! *Politics
    என்ன நடக்கிறது

    என்ன நடக்கிறது

    தற்போது அதிமுக அலுவலக்தில் தூய்மை படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. அங்கு திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு குற்றஞ்சாட்டி உள்ளது. இதற்கான ஆதாரங்களை எடப்பாடி பழனிசாமி தரப்பு நேற்று போட்டோவாகவும், வீடியோவாகவும் எடுத்தது. இதையடுத்து தற்போது அலுவலகத்தை சுத்தப்படும் பணிகள் நடந்து வருகின்றன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+