டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகிலேயே மிக மோசம்.. என்னதான் நடக்கிறது தலைநகரில்?.. டெல்லியில் காற்று மாசடைய இதுதான் காரணம்!

டெல்லியில் காற்று மாசு அடைவதற்கு தொழிற்சாலைகள் மட்டுமின்றி வேறு சில முக்கிய காரணங்களும் இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    No 'good air' in national capital | டெல்லியில் பொறுத்துக் கொள்ள முடியாத காற்று மாசு !

    டெல்லி: டெல்லியில் காற்று மாசு அடைவதற்கு தொழிற்சாலைகள் மட்டுமின்றி வேறு சில முக்கிய காரணங்களும் இருக்கிறது.

    டெல்லியில் இருக்கும் மாசை பார்த்தால், உலகமே எலட்ரிக் பேருந்துகள் குறித்து சிந்திக்க தொடங்கிவிடும் என்று இந்தியா வந்த ஜெர்மன் அதிபர் ஏஞ்சேலா மெர்கெல் தெரிவித்தார். ஆம் டெல்லியில் ஏற்பட்டு இருக்கும் காற்று மாசு உலகம் மொத்தத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

    உலக வானிலை மாற்றத்திற்காக கிரேட்டா தன்பெர்க் போராடி வரும் அதே காலத்தில்தான் டெல்லியில் காற்று மாசும் ஏற்பட்டு இருக்கிறது. டெல்லியில் காற்று மாசு புள்ளிகள் அபாய கட்டத்தில் இருக்கிறது. இதன் அர்த்தம் அங்கிருக்கும் காற்று மனிதர்கள் சுவாசிக்க தகுதியற்றதாகும். டெல்லியில் மருத்துவ அவசர நிலை எனப்படும் medical emergency அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    சென்னை, பெங்களூர், நாக்பூர் கூட ஓகே.. டெல்லி வேண்டாம்.. நாட்டின் தலைநகரை மாற்ற வலுக்கும் கோரிக்கைசென்னை, பெங்களூர், நாக்பூர் கூட ஓகே.. டெல்லி வேண்டாம்.. நாட்டின் தலைநகரை மாற்ற வலுக்கும் கோரிக்கை

    என்ன பாதிப்பு

    என்ன பாதிப்பு

    டெல்லியில் 8 இடங்களில் காற்று மாசு புள்ளிகள் 999 புள்ளியை தொட்டு இருக்கிறது. 9 இடங்களில் புள்ளிகள் 920 புள்ளிகளை தாண்டி இருக்கிறது. இதனால் டெல்லியில் பகல் நேரம் கூட எதுவும் தெரியவில்லை. 10 மீட்டர் தூரத்தில் இருக்கும் விஷயம் எதுவும் இதனால் கண்ணுக்கு தெரியவில்லை. இந்த அதீத புகை காரணமாக டெல்லியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. சாலை போக்குவரத்து இதனால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

    நிறைய காரணம்

    நிறைய காரணம்

    டெல்லியில் காற்று இப்படி மோசமாக மாசடைய நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. வெறும் 10 வருடத்தில் டெல்லியில் காற்று மாசு அடைந்துவிடவில்லை. 30 வருடமாக கொஞ்சம் கொஞ்சமாக காற்று மாசுபட்டு, தற்போது மிக மோசமான நிலையை அடைந்து உள்ளது. டெல்லியில் காற்று மாசடைய 40% அருகில் உள்ள மாநிலங்கள்தான் காரணம் என்கிறார்கள்.

    அருகில் என்ன சிக்கல்

    அருகில் என்ன சிக்கல்

    ஆம் அருகில் இருக்கும் பஞ்சாப் டெல்லியில் காற்று மாசில் அதிக அளவில் பங்கு வகிக்கிறது. அங்கு வருட கடைசியில் அதிக அளவில் விவசாயம் முடிந்து களைகள் எரிக்கப்படும். இந்த புகை மொத்தமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் டெல்லிக்கு வரும். பஞ்சாப்பில் எப்போதெல்லாம் விவசாய அறுவடை முடிகிறதோ அப்போதெல்லாம் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கமாக இருக்கிறது.

    டெல்லியும் காரணம்

    டெல்லியும் காரணம்

    ஆனால் டெல்லியில் மீதமுள்ள 60% மாசுபாட்டிற்கு காரணம் முழுக்க முழுக்க மத்திய அரசும், டெல்லி அரசும்தான். டெல்லியின் முன்னேற்ற ஆணையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. டெல்லியில் தொடங்கப்படும் தொழிற்சாலைகள் எல்லாம் மத்திய அரசு மூலம் நேரடியாக அனுமதி பெற்று செய்யப்படுகிறது .

    முக்கிய பின்னணி

    முக்கிய பின்னணி

    இதுதான் டெல்லி மாசுபாட்டிற்கு முக்கிய காரணம் என்கிறார்கள். 1982ல் டெல்லியில் ஏசியன் கேம்ஸ் போட்டிகள் நடந்தது. அப்போதுதான் டெல்லி ரிங் ரோடு வரை மிக வேகமாக வளர தொடங்கியது. இதனால் டெல்லியில் சுற்றிலும் இருந்த தொழிற்சாலைகள் டெல்லியை நோக்கி படை எடுக்க தொடங்கியது. 1980 பிறகுதான் டெல்லியின் முகம் மாறியது, வானிலையும் மாறியது.

    எப்படி பகுதிகள்

    எப்படி பகுதிகள்

    அதேபோல் டெல்லியை சுற்றி இருக்கும் ஹரியானா, உத்தர பிரதேசம், பிகார், மத்திய பிரதேசம் எல்லாம் மிக மோசமான வறுமையில் உழன்று கொண்டு இருந்தது. இதன் காரணமாக அங்கிருந்து பல லட்சம் மக்கள் டெல்லிக்கு படையெடுக்க தொடங்கினார்கள். 1985க்கு பின் தொடங்கிய இந்த படை எடுப்பு இப்போது வரை முடியவில்லை.

     இரண்டு காரணங்கள்

    இரண்டு காரணங்கள்

    டெல்லியில் காணப்படும் அதீத மக்கள் தொகை, அதீத தொழிற்சாலைகள் இரண்டும் அம்மாநிலத்தின் மிக மோசமான காற்று மாசுபாட்டிற்கு காரணம். அதேபோல் டெல்லியில் உண்மையான ஆட்சி அதிகாரம் முதல்வரிடம் இருக்கிறதா? அல்லது துணை நிலை கவர்னரிடம் இருக்கிறதா என்று பலருக்கும் குழப்பம் இருக்கிறது.

    வேலைகள்

    வேலைகள்

    இதனால் அதிகாரிகள் தங்கள் செயலை செய்ய அதிகம் யோசிக்க வேண்டி இருக்கிறது. புது -டெல்லியின் ரயில் நிலையம் தொடங்கி 1985க்கு பின் கட்டப்பட்ட எதுவுமே சரியான திட்டமிடலுடன் கட்டப்படவில்லை என்று இயற்கை ஆர்வலர்கள் புகார் கூறுகிறார்கள். சென்னை போல சரியான திட்டமிடல் இல்லை என்று டெல்லி வாசிகள் தெரிவிக்கிறார்கள்.

    மிக மிக மோசம்

    மிக மிக மோசம்

    டெல்லியை நோக்கி மக்கள் இவ்வளவு பேர் வருவார்கள் மத்திய அரசோ, டெல்லி அரசோ கொஞ்சம் கூட 90களின் இறுதியில் நினைக்கவில்லை. அதுதான் தற்போது அங்கு கட்டுபடுத்த முடியாத காற்று மாசுபாட்டிற்கு காரணம் என்கிறார்கள். இதை கண்டிப்பாக இன்னும் 20 வருடங்களில் சரி செய்ய முடியாது என்றும் கூறுகிறார்கள்.

    ஒரே தீர்வு

    ஒரே தீர்வு

    ஆம் டெல்லியில் இருந்து தலை நகரை வேறு இடத்திற்கு மாற்றி, அதிகாரிகள், அலுவலகங்களை வேறு இடத்திற்கு மாற்றி டெல்லியின் மக்கள் தொகையை செயற்கையாக குறைத்தால் மட்டுமே காற்று மாசு குறையும் என்கிறார்கள்,. ஆட் - ஈவன் எனப்படும் வாகன விதிகள் எல்லாம் தற்காலிக தீர்வாக மட்டுமே இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

    English summary
    What is the real reason for Delhi air pollution? - Here is the 30 years of issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X