திடீரென முடங்கிய வாட்ஸ்அப்! திணறிப் போன மக்கள்! உலகம் முழுவதும் இதே நிலைமையா? என்னாச்சு தெரியுமா?
டெல்லி : இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாட்ஸ் அப் சேவை திடீரென முடங்கியதால் பயனர்கள் மெசேஜ் அனுப்ப முடியாமலும், முக்கிய தகவல்களை பகிர முடியாமலும் அவதி அடைந்துள்ளனர். முடக்கத்திற்கான காரணம் என்ன என்பதும் தெரியவில்லை.
பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போல தற்போது உலகம் முழுவதும் அதிகம் பேர் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ் அப் உள்ளது. உலக அளவில் பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர்.
தகவல் பரிமாற்றத்தோடு நின்றுவிடாமல் தற்போது வீடியோ காலிங், போட்டோ வீடியோ பகிர்தல், வாய்ஸ் காலிங் வசதிகளையும் வாட்ஸ் அப் தனது பயனர்களுக்கு வழங்குகிறது.

வாட்ஸ் ஆப்
ஒரு நாளைக்கு கோடிக்கணக்கில் வீடியோக்கள் புகைப்படங்கள் முக்கியமான தகவல்கள் வாட்ஸ் அப் மூலம் பகிரப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாட்ஸ் அப் பாதுகாப்பு அம்சங்களில் மிகவும் கவனமாக செயல்பட்டு வரும் நிலையில் அடிக்கடி அப்டேட்டுகளும் விடப்பட்டு வருவதால் வாட்ஸ் அப் பாதுகாப்பானதாக இருக்கிறது. ஆனால் அதிலும் சில குறைபாடுகள் ஏற்படுகின்றன.

ஹேக்கர்கள் கைவரிசை
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட வாட்ஸ் அப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயற்சித்ததாக வாட்ஸ் அப் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் பயனாளர்களுக்கு சில அறிவுரைகளும் வழங்கப்பட்டது. திடீரென ஹேக்கர்கள் அனுப்பிய லிங்குகளை ஓபன் செய்த வாடிக்கையாளர்கள் அவர்களது கணக்கு ஹேக் செய்யப்பட்டதை உணர்ந்தனர். வாடிக்கையாளர்கள் பலரும் தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு புகார்களை தெரிவித்தனர்.

சேவை முடக்கம்
இதையடுத்து வாடிக்கையாளர்கள் அனைவரும் உடனடியாக வாட்ஸ் அப்பை அப்டேட் செய்ய வேண்டும் என அந்த நிறுவனம் கூறியது. இந்நிலையில் தற்போது உலகின் பல இடங்களில் வாட்ஸ் அப் செயலி திடீரென முடங்கியுள்ளதாக பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்தியாவிலும் சில நகரங்களில் இந்த சேவை குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் முக்கிய தகவல்கள் படங்கள் வீடியோக்களை லோட் செய்ய முடியவில்லை ஏற்கனவே வந்திருக்கும் தகவல்களையும் ஓபன் செய்து படிக்க முடியவில்லை என பயனர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

என்ன காரணம்?
அதே நேரத்தில் முடக்கத்திற்கான காரணம் என்ன என்பது குறித்தும் வாட்ஸ் அப் நிறுவனத்தின் தரப்பில் இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை அதே நேரத்தில் முடக்கத்தை சரி செய்யும் பணியில் வாட்ஸ் அப் நிறுவனத்தின் மென்பொருள் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமா அல்லது ஹேக்கரின் வேலையா எனவும் ஆராயப்பட்டு வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications