நாங்க அப்பவே சொன்னோம்! திண்டுக்கல் திமுகவிலும் களைகட்டிய பஞ்சாயத்து! உற்சாகமிழந்த உடன்பிறப்புகள்!
திண்டுக்கல் : திமுக உட்கட்சி தேர்தலில் நிர்வாகிகள் நியமனத்தில் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் ராமநாதபுரம் மதுரை மாவட்டங்களை போல திண்டுக்கல் மாவட்டத்திலும் கோஷ்டி மோதல் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
திமுகவை பொருத்தவரை தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள் வைத்தது தான் சட்டம் என்ற அளவுக்கு பல ஆண்டு காலம் நிர்வாகிகள் கோலோச்சி வருகின்றனர். துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
அந்த வகையில் தென் மாவட்டங்களில் திமுகவின் முக்கிய முகமாக வலம் வருபவர் ஐ.பெரியசாமி. முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் நம்பிக்கைக்குரியவராக இருந்த அவர், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளார்.

ஐ.பெரியசாமி
ஆத்தூர் தொகுதியில் ஆழமாக வேரூன்றி உள்ள அவர் திமுக ஆட்சி காலங்களில் முப்பெரும் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர் தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கிறார். அவரது மகன் ஐ.பி.செந்தில்குமாரும் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மற்றொரு மகன் இதுவரை அரசியல் நிகழ்ச்சிகளில் தலை காட்டியதே கிடையாது.

ஐபி செந்தில்குமார்
திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராகவும், மாநில இளைஞரணி துணைச் செயலாளராகவும் பதவி வகித்த அவர் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இருந்தும் விடாமல் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் மீண்டும் பழனி தொகுதியிலேயே போட்டியிட்ட அவர் முதன் முறையாக வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.

உட்கட்சி தேர்தல்
அதன் பிறகு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். மீண்டும் 2021 சட்டமன்ற தேர்தலில் 2வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்ட செந்தில்குமார், தற்போது நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் மீண்டும் 2வது முறையாக மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக திமுகவில் மதுரை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்று வந்த உட்கட்சி மோதல் திண்டுக்கல் வரை பரவியுள்ளது.

ஒன்றிய செயலாளர்
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்தலில் திண்டுக்கல் ஒன்றிய செயலாளராக இருக்கும் நெடுஞ்செழியன் மீது கட்சியினரே கடும் அதிருப்தியில் இருந்ததால் அவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தமிழகத்திலேயே ஒரு ஒன்றிய செயலாளருக்கு எதிராக அதிக அளவில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது திண்டுக்கல்லில் தான் என்கின்றனர் உடன்பிறப்புகள். ஆனால் அமைச்சர் ஐ.பெரியசாமியின் சிபாரிசு காரணமாக நெடுஞ்செழியனே மீண்டும் ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்டார்.

நிர்வாகிகள் அதிர்ச்சி
இதனால் கிளை கழக நிர்வாகிகள் தொடங்கி ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் வரை பலரும் சோர்வடைந்தனர். குறிப்பாக திமுக மாவட்ட செயலாளராக இருக்கும் ஐபி செந்தில்குமாரே நெடுஞ்செழியனின் நியமனத்திற்கு முதலில் கையெழுத்து போட மறுத்ததாகவும் பிறகு தந்தை சொல் கேட்டு கையெழுத்திட்டதாகவும் கூறுகின்றனர் திமுகவினர். இது மட்டுமன்றி திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதே போன்ற புகார்கள் எழுந்துள்ளது.

திண்டுக்கல்லிலும் மோதல்?
பத்தாண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்தபோது கட்சிக்காக உழைத்தார்கள் என்ற ரீதியில் நிர்வாகிகளுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டு இருந்தாலும் அதில் பலர் சொந்தக் கட்சியினரையே மதிக்கவில்லை எனவும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் எதிர்க்கட்சியோடு கூட்டணி அமைத்துக் கொண்டு உள்ளடி வேலைகளில் 'சிலர்' ஈடுபட்டனர் என்கின்றனர் உடன்பிறப்புகள். குறிப்பாக வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏ காந்திராஜனின் வெற்றிக்கு பாடுபட்டவரும் பேரூராட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற காரணமாக இருந்த 'மூத்த நிர்வாகி' ஒருவரை சாதிய ரீதியாக ஒதுக்கி வைத்துள்ளதாகவும் கூறுகின்றனர்' இது போன்று அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் ராமநாதபுரம் மதுரை மாவட்டங்களை போல திண்டுக்கல் மாவட்டத்திலும் கோஷ்டி மோதல் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications