Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“கிருபானந்த வாரியாருக்கு நடந்ததுதான் அண்ணாமலைக்கும்..” - ஆர்.எஸ்.பாரதி பகிரங்க மிரட்டலால் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: வெளியே நடமாட முடியாது என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அண்ணாவை பற்றி கிருபானந்த வாரியார் தவறாகப் பேசினார். அதனால், அவர் எங்கும் வெளியே சென்று பேச முடியாத நிலை உருவானது. இதே நிலைமைதான் அண்ணாமலைக்கும் ஏற்படும் என ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், தமிழக பா.ஜ.கவினர் தற்போது பிள்ளை பிடிக்கும் வேலையைச் செய்து வருகின்றனர். திருச்சி சிவாவின் மகனை பிடித்து பா.ஜ.கவில் சேர்த்துள்ளனர் என ஆர்.எஸ்.பாரதி சாடியுள்ளார்.

அண்ணாமலை

அண்ணாமலை

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தி.மு.க அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். தி.மு.க அரசுக்கு எதிராக அண்ணாமலை ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருவதால் தி.மு.கவினர் கொதிப்பில் உள்ளனர்.

இந்நிலையில், அண்ணாமலைக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி தற்போது பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓராண்டு சாதனை

ஓராண்டு சாதனை

தி.மு.க அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்திற்கு தி.மு.க கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி எம்.எல்.ஏவுமான ஐ.பி.செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

 காப்பியடித்து

காப்பியடித்து

ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், "தமிழக முதல்வரின் ஓராண்டு ஆட்சியில் பெண்கள் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளார். இதனை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பாராட்டுகின்றன.

தமிழகத்தில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியைப் பார்த்து காப்பியடித்து, பிரதமர் மோடி உத்தர பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் 60 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளார்.

இரண்டே மாதத்தில்

இரண்டே மாதத்தில்

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அப்போதைய அமைச்சர்கள் செய்த ஊழல்கள் தொடர்பான விசாரணை ஆரம்பமாகி உள்ளது. குறிப்பாக கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தோண்டத் தோண்ட புதிய புதிய அதிர்ச்சிகரமான விஷயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து இந்த விவகாரத்தில் எந்தெந்த அமைச்சர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது மக்கள் மன்றத்திற்கு வரும்.

பிள்ளை பிடிக்கும் வேலை

பிள்ளை பிடிக்கும் வேலை

பா.ஜ.க-காரர்கள் பிள்ளை பிடிக்கும் வேலையைச் செய்து வருகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மகள் தமிழிசை சௌந்தரராஜனை பிடித்து பா.ஜ.க-வில் சேர்த்தனர். அதேபோல் தற்போது திருச்சி சிவாவின் மகனை பிடித்து பா.ஜ.கவில் சேர்த்துள்ளனர். தமிழகத்தில் நிலையான கொள்கை இல்லாமல் பா.ஜ.க இப்படி நடந்து கொண்டிருக்கிறது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

தமிழகத்தில் தேவையில்லாமல் கலவரத்தை தூண்டும் வகையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். அவர் இவ்வாறு பேசி வருவது சரியல்ல. அவருக்கு எச்சரிக்கை விடுகின்றேன். பழைய தி.மு.ககாரன் மீண்டும் வந்து விடுவான். எனவே எச்சரிக்கையாக இருந்து கொள்ளும்படி தெரிவித்துக் கொள்கின்றேன்.

அண்ணாவைப் பற்றி கிருபானந்த வாரியார் தவறாகப் பேசினார். அதனால் அவர் எங்கும் வெளியே சென்று பேச முடியாத நிலை உருவானது. இதே நிலைமைதான் அண்ணாமலைக்கும் ஏற்படும் என எச்சரிக்கிறேன்" எனப் பேசியுள்ளார். தி.மு.கவின் முன்னணி தலைவரான ஆர்.எஸ்.பாரதி அண்ணாமலையை மிரட்டும் தொனியில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+