தந்தைக்கு முதல் மரியாதை! செந்தில்குமார் எம்.எல்.ஏ. செயலால் திண்டுக்கல் திமுகவினர் உற்சாகம்!
திண்டுக்கல்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி நேர்காணல் நடத்தியிருக்கிறார்.
இதில் விஷேசம் என்னவென்றால் பொதுவாக இது போன்ற வேட்பாளர்கள் நேர்காணலை மாவட்டச் செயலாளராக இருப்பவர்கள் தான் நடத்துவார்கள்.
அந்த வகையில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக இருக்கும் ஐ.பி.செந்தில்குமார் தான் நேர்காணல் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் கட்சியின் சீனியரும், தனது தந்தையுமான அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு முதல் மரியாதை கொடுத்து கவுரவித்திருக்கிறார் செந்தில்குமார் எம்.எல்.ஏ.

திண்டுக்கல் கிழக்கு
திண்டுக்கல் மாவட்ட திமுகவை பொறுத்தவரை கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டு கிழக்கு மாவட்டத்திற்கு அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் ஐ.பி. செந்தில்குமார் எம்.எல்.ஏ.வும், மேற்கு மாவட்டத்திற்கு அமைச்சர் சக்கரபாணியும் மாவட்டச் செயலாளர்களாக இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் முன்பு ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் அமைச்சர் ஐ.பெரியசாமி.

முதல் மரியாதை
இந்நிலையில் வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி தான் நேர்காணல் நடத்தினார். வழக்கமாக இந்த நேர்காணலை மாவட்டச் செயலாளர் என்ற முறையில் ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தான் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் தன்னை விட திண்டுக்கல் மாவட்ட திமுகவினரை அதிகம் அறிந்து வைத்திருக்கும் தனது தந்தையும், அமைச்சருமான ஐ.பெரியசாமியை நேர்காணல் நடத்த வைத்து முதல் மரியாதை கொடுத்து கவுரவித்திருக்கிறார் ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ.

கிழக்கு மாவட்டம்
இதனால் நேர்காணலில் கலந்துகொள்ள சென்ற திமுக நிர்வாகிகளிடம் பழைய நினைவுகள் சிலவற்றை அசைபோட்டவாறு கேள்விகளை கேட்டிருக்கிறார் அமைச்சர் ஐ.பெரியசாமி. சீட் கொடுக்கிறாரோ இல்லையோ பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளை எல்லாம் நினைவுகூர்ந்து பேசினாரே அது போதும் எங்களுக்கு என பலரும் உற்சாகத்துடன் கூறுவதை கேட்க முடிகிறது. திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்திற்குள் ஆத்தூர், கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், தாடிக்கொம்பு, உள்ளிட்ட பேரூராட்சிகள் வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல் நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, கொடைக்கானல் நகராட்சிகளும் வருகின்றன.

பஷீருக்கும் மரியாதை
இதனிடையே திண்டுக்கல் முன்னாள் நகர்மன்றத் தலைவரும், தொ.மு.ச. நிர்வாகியுமான பஷீர் அகமதுவையும் நேர்காணலின் போது அருகில் வைத்துக்கொண்டார் அமைச்சர் ஐ.பெரியசாமி. பொதுவாகவே ஐ.பெரியசாமி தரப்புக்கும் பஷீர் அகமது தரப்புக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கும் எனக் கூறப்படும் நிலையில் இந்த நிகழ்வும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications