திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பபிதா வீட்டிற்கு வரும் விஐபிக்கள் யார்?.. பவித்ராவுடன் கைதான ரூபாவதி யார்.. திணறும் திண்டுக்கல்

பெண் சாமியார் பவித்ரா பற்றிய தகவல்கள் வெளியாகி வருகிறது

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: நில மோசடி புகாரில் கைதாகியுள்ள பெண் சாமியார் பவித்ரா குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன..!

திண்டுக்கல் மேற்கு ஆரோக்கியமாதா தெருவில் வசித்து வருபவர் பவித்ரா... இவர் ஒரு பெண் சாமியார்.. இவர் தனக்கு காளியின் பரிபூரண அருள் கிடைத்துள்ளதாகவும் ஆகையால் பொதுமக்கள் தன்னிடம் ஆசீர்வாதம் பெற்று பயனடையுமாறு திண்டுக்கல்லில் விளம்பரம் செய்திருந்தார்.

அதுபோலவே, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நிகழ்ச்சிகளை நடத்தினார். இந்த நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்... இதன்மூலம் பிரபலமடைய தொடங்கினார்.

சென்னையில் கொரோனா 2-வது அலையை விட.. 3-வது அலை மிக அதிவேகம்.. டேட்டாவுடன் விளக்கும் விஜயானந்த் சென்னையில் கொரோனா 2-வது அலையை விட.. 3-வது அலை மிக அதிவேகம்.. டேட்டாவுடன் விளக்கும் விஜயானந்த்

நிலமோசடி

நிலமோசடி

இந்நிலையில்தான், நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தவயோகி என்ற ஆண் சாமியார் கும்பகோணம் பகுதியில் ஆசிரமம் அமைக்க வேண்டும் என்றும் அதற்கு நிலம் வாங்கி தர வேண்டும் என பவித்ராவிடம் கேட்டுள்ளார். அதற்கு உடனடியாக ஏற்பாடு செய்வதாகக் கூறி ரூபாய் 5,50,000 மற்றும் 60 சவரன் தங்க நகையை பெற்றுள்ளார். ஆனால் ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் பவித்ரா நிலம் வாங்கித் தரவில்லை என்பதால் போலீசில் புகார் தந்தார்.

ரூபாவதி

ரூபாவதி

அந்த புகாரின்பேரில் போலீசாரும் பவித்ராவை கைது செய்தனர்.. அவருடன்அவரது தங்கை ரூபாவதியும் கைதாகி உள்ளார்.. அக்கா - தங்கை இருவருமே இப்போது ஜெயிலில் உள்ளனர்.. முன்னதாக, இவர்களை கைது செய்து நிலக்கோட்டைக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டனர்... அப்போது பவித்ரா புலம்பி கொண்டே இருந்தாராம்.. நம்ம யார் வம்புக்கு போறது இல்ல, என் இவங்க இப்படி செய்யறாங்க என்று ஸ்டேஷனில் தனியாக புலம்பி கொண்டே இருந்தராம்..

தங்கை

தங்கை

பவித்ராவின் உண்மையான பெயர் பபிதா.. கைது செய்யப்பட்ட பவித்ராவுக்கு திருமணம் ஆகவில்லை என்று போலீசார் தெரிவிக்கிறார்கள்.. ஆனால், இவருடைய தங்கை ரூபாவதிக்கு கல்யாணம் ஆகிவிட்டது.. ஆனால் விவாகரத்து ஆனவர்.. இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்... இவர்களை பவித்ராதான் படிக்க வைத்துள்ளார்.. ரூபாவதி உட்பட சில பெண் சீடர்களை உதவிக்கு வைத்திருந்தார் பவித்ரா..

பவித்ரா

பவித்ரா

பவித்ராவிடம் அருள்வாக்கு வாங்குவதற்காக, முக்கிய பிரமுகர்கள், போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் ஆகியோர் வந்துள்ளனர்.. இதைதான் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அவர்கள் மூலம் ஏகப்பட்ட சலுகைகளை பவித்ரா பெற்றுள்ளார்.. மேலும் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் பெயர்களை பயன்படுத்தி தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று மிரட்டி வந்துள்ளதாகவும் தெரிகிறது.

Recommended Video

    ரூ 5 லட்சம், 60 பவுன் நகை மோசடி.. பிரளயம் வரும்னு சொன்ன மாடர்ன் பெண் சாமியார் ஸ்ரீபவித்ரா கைது
    மர்மங்கள்

    மர்மங்கள்

    அதுமட்டுமல்ல, பவித்ரா வசிக்கும் வீடு மர்மமான இடமாகவே இருக்கும் என்று அந்த பகுதி மக்கள் சொல்கிறார்கள்.. சில நாட்கள் பூட்டியிருக்குமாம்.. பல நாட்கள் திறந்திருக்குமாம்.. வீட்டிற்கு நிறைய பேர் வந்து போவார்களாம்.. ஆனால் அவர்கள் யார் என்று தங்களுக்கு தெரியாது என்கிறார்கள்.. அந்த வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதுகூட மர்மமாகவே இருக்குமாம்.. இதை பற்றியெல்லாம்கூட போலீசார் விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிவரும் என்கிறார்கள் அந்த பகுதியில் உள்ள மக்கள்..!

    English summary
    Who is this Babitha? Why Dindigul Woman Preacher Pavithra arrested
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X