பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ
துபாய்: அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று, ஈரான் அதிபர் பேசியிருந்த நிலையில், தற்போது துபாய் சர்வதேச விமான நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடந்திருக்கிறது. இதனால் துபாய்க்கு அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
உலகின் 2வது பரபரப்பான விமான நிலையமான துபாய் விமான நிலையத்தில் இன்று காலை பலத்த வெடிச் சத்தங்கள் கேட்டன. இதன் காரணமாக விமானச் சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. சில விமானங்கள் பின்னர் புறப்படத் தொடங்கினாலும், பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை உறுதிசெய்த பிறகே விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

என்ன நடந்தது?
வெடிச் சத்தங்கள் கேட்ட உடனேயே, துபாய் அரசு தனது வான் பாதுகாப்பு அமைப்புகளை ஆக்டிவேட் செய்ததாக அறிவித்தது. பாதுகாப்புக்காக விமான நிலையத்தில் இருந்து புறப்பட காத்திருந்த பயணிகள் சுரங்கப்பாதைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் இது குறித்து பேசிய பயணிகள், விமான நிலையத்தின் மீது வெடிச் சத்தம் கேட்டதாகவும், அதன் பிறகு வானத்தில் புகை மண்டலம் எழுந்ததாகவும் கூறினார். நகரம் முழுவதும் வெடிச் சத்தங்கள் கேட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
ட்ரோன் தாக்குதல்
எமிரேட்ஸ் விமான நிறுவனம், "துபாய்க்கு வரும் மற்றும் செல்லும் அனைத்து விமானச் சேவைகளும் அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளன" என்று தெரிவித்தது. இந்த சம்பவத்தையடுத்து, துபாய் விமான நிலையத்திற்கு மேலே புகை எழுந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. ஆனால், அங்கே எந்தச் சம்பவமும் நடக்கவில்லை என்ற செய்திகளை துபாய் அரசு முதலில் மறுத்தது. பின்னர் ஒப்புக்கொண்டது.
Another Iranian attack drone hit Dubai International Airport, barely missing Concourse A. pic.twitter.com/axvNdrXUFn
— OSINTtechnical (@Osinttechnical) March 7, 2026
விமான போக்குவரத்தில் சிக்கல்
விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் ஃபிளைட்ரேடார்24 என்ற இணையதளம், துபாய் வான்வெளியில் மிகக் குறைவான விமானங்களையே காட்டியது. ஆனால், அதிகாரப்பூர்வ விமான நிலைய இணையதளம், பல விமானங்கள் வந்து செல்வதாக கூறியுள்ளத. விமான நிலையத்தில் சராசரியாக 60 முதல் 90 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டதாகவும் அந்த இணையதளம் தெரிவித்தது.
இந்தியாவுக்கு விமானங்கள்
துபாய், அபுதாபியில் உள்ள சயீத் சர்வதேச விமான நிலையம், ஷார்ஜா விமான நிலையம், அக்ரோதிரி விமான நிலையம் மற்றும் ஃபூஜைரா சர்வதேச விமான நிலையங்களுக்கு விமானங்கள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இங்கு இருந்து டெல்லி, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு இந்தியர்கள் திரும்புவதற்கு வசதியாக மாற்று விமானச் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
-
கோதாவில் இறங்கும் இங்கிலாந்து.. 35 நாடுகளை திரட்டி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு? எகிறும் டென்ஷன் -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
இதுக்கு ஒரு எண்டே கிடையாதா.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போர் இந்திய இழந்தது என்ன..? -
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு! -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
“இந்தப் போரால் ஒரே ஒரு நல்லது நடக்கும்”.. ஈரான் - இஸ்ரேல் போர் பற்றி வைரமுத்து கவிதை! -
ரூபாய் மதிப்பு 100-ஐ தாண்டுமா? ஆர்பிஐ களத்தில் இறங்கியும் பலன் கிடைக்காத நிலை!












Click it and Unblock the Notifications