150 கி.மீ வேகத்தில் பட்ட பந்து; நியூசிலாந்தின் முக்கிய வீரர் காயம்! இந்தியாவிற்கு எதிராக ஆடமாட்டார்?
துபாய்: இந்தியாவுக்கு எதிராக வரும் ஞாயிற்றுக்கிழமை உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் நியூசிலாந்து ஆட வேண்டியுள்ள நிலையில் அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன் காயம் காரணமாக களமிறங்குவது சந்தேகம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் ஞாயிற்றுக்கிழமை துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ள அந்த போட்டி, இரு அணிகளுக்குமே வாழ்வா சாவா என்பதை போன்ற போட்டி. இதில் வெற்றி பெறும் அணிதான் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெறும்.
இப்படியான நிலையில்தான், நியூசிலாந்து அணிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்த நியூசிலாந்தின் முன்னணி ஓப்பனிங் பேட்ஸ்மேன், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் களமிறங்குவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.

மார்டின் கப்தில் சந்தேகம்
அந்த அணியின் மிக சீனியர் பேட்ஸ்மேனும், ஓப்பனருமான மார்டின் கப்தில், இந்தியாவுக்கு எதிராக ஆடுவது சந்தேகமாம். இதற்கு காரணம் பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில், சுமார் 150 கி.மீ வேகத்தில் பாகிஸ்தான் பவுலர் ஹரிஸ் ரவுப் வீசிய பந்து கப்தில் காலில் பட்டது. ரவுப் வீசிய முதல் பந்தை கப்தில் எதிர்கொண்டார். அவ்வளவு வேகத்தில் அந்த பந்து வரும் என்று அவர் நினைத்திருக்கவில்லை. மின்னல் மாதிரி அந்த பந்து கப்திலின் இரு கால்களுக்கு நடுவேயும் யார்க்கராக போனது. பேட் அருகே வரும் முன்பாக பந்து கப்தில் கணுக்காலில் பட்டு, உயர எழும்பி கீப்பரிடம் சென்றது. கமெண்டரியில் அமர்ந்திருந்த ஸ்ரீகாந்த் கூட இதுபோன்ற பந்துகளை தான் முன்பு வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்கள், ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர்கள் வீசிதான் பார்த்துள்ளதாகவும், இது அச்சுறுத்தும் பந்து என்றும் குறிப்பிட்டார்.

சிறப்பாக ஆடினார்
இப்படியான வேகத்தில் வந்த பந்து காலில் பட்டதால் கப்தில் சற்று காலை தூக்கி உதறினார். பிறகு அவர் ஆட்டத்தை தொடர்ந்தாலும் சில நிமிடங்களில் ரவுப் பந்தில் பௌல்ட் ஆகினார். 17 ரன்களை கப்தில் சேர்த்தபோதிலும் அவர் களத்தில் இருந்தவரை பந்துகளை சிறப்பாகவே எதிர் கொண்டார். சற்று இடத்தை ஏற்படுத்திக் கொண்டு அவர் ஆப்சைடில் அடித்த பவுண்டரிகள் சிறப்பாக இருந்தன. ஆனால் காலில் பட்ட காயத்தால் வலி அதிகமாகியுள்ளதால், அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
Recommended Video

உறுதியாக தெரியவில்லை
இன்னும் 48 மணிநேரம் கழித்துதான், அவர் தேறி விடுவாரா அல்லது ஓய்வு தேவையா என்பதை உறுதி செய்ய முடியும் என்று, நியூசிலாந்து அமி பயிற்சியாளர் கேரி ஸ்டீட் தெரிவித்துள்ளார். இது நியூசிலாந்துக்கு பெரும் பின்னடைவாகும். 2015ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 163 பந்துகளில் 237 ரன்கள் விளாசியவர் மார்டின் கப்தில். நீண்ட காலமாக நியூசிலாந்துக்காக ஆடி வரும் அனுபவம் கொண்ட வீரராகும்.

பெர்குசன் இல்லை
ஏற்கனவே நியூசிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரும், ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவிற்காக ஆடியவருமான பெர்குசன் காயத்தால் உலக கோப்பை அணியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளார். இது நியூசிலாந்தை வெகுவாக பாதித்துள்ளது.

வேறு வீரர்
அதேநேரம், பெர்குசனுக்கு பதிலாக ஆடம் மில்னேவை அணியில் சேர்க்க ஐசிசி டெக்னிக்கல் கமிட்டி அனுமதிி வழங்கவில்லை என்று நியூசிலாந்து அணி நிர்வாகம் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில், ஆடம் மில்னே ஆட வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை. அதற்கான முயற்சிகளில் நியூசிலாந்து அணி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications